விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மோகனா, குழந்தைக்கு அழகர் என்று பெயர் வைத்திருக்கும் விஷயத்தை சொன்னார். பின் குழந்தையை மாற்றிக் கொண்டார்கள். அப்பத்தா, குழந்தைக்கு லட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார். அதைக் கேட்டு செய்து எமோஷனலாக அழுதார். பின் தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்ததை நினைத்து சேது ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதேபோல் தமிழும் தன்னுடைய மகனை பார்த்து சந்தோஷப்பட்டார்.

சேது தன் மகளை ரொம்ப சந்தோஷத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்தார். சேதுவின் மகளுக்குமே தொட்டிலில் போட்டு தமிழ்செல்வி வைத்த பெயரையே அலைந்தார்கள். இன்னொரு பக்கம் தன் மகன் வந்த சந்தோஷத்தில் தமிழ் செல்வி இருந்தார். அப்போது அப்பத்தா, தமிழின் அம்மாவிடம் பெண் குழந்தை சேது விடம் வளரட்டும். மகனை இங்கு வளர்த்துக் கொள்ளலாம். சேது தன்னுடைய அம்மா ஆசையாக வளர்க்கட்டும் என்றெல்லாம் சொல்லிருந்தார். இதை அறிந்த தமிழ்செல்வி கொந்தளிக்கிறார். என் மகள் என்னுடன் தான் இருக்க வேண்டும் என்றார்.
சின்ன மருமகள்:
அதற்குப்பின் ஈஸ்வரி, மீனாட்சி குழந்தையின் பெயருக்கு முன்னால் தமிழ்ச்செல்வியின் இன்ஷியல் இருப்பதை கவனித்து அதைப்பற்றி சேதுவிடம் சொன்னார். இதனால் கொந்தளித்த சேது, தமிழ் செல்விக்கு போன் செய்து சண்டை வாங்கினார். தமிழ் செல்வி, என் மகளுக்கு என்னுடைய பெயர்தான் இருக்கும். மகன் பெயர் முன்னாள் உங்கள் பெயர் இன்ஷியல் போட்டிருக்கிறீர்கள். நான் அதைப் பற்றி கேட்கவே இல்லை. என்னுடைய இன்சியலை எடுக்க முடியாது என்றெல்லாம் ஆவேசமாக சண்டை போட்டார். சேதுவால் எதுவும் பேச முடியவில்லை. இதைப் பற்றி சேது, ராஜாங்கத்திடம் சொன்னார். ராஜாங்கம், தமிழ்ச்செல்வி பெயர் இருக்கட்டும். இதை பெரிதாக பிரச்சினை செய்ய வேண்டாம் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வெளியில் மழை வருவதால் குழந்தைகளை தமிழ்ச்செல்வி தன்னுடன் தூங்க வைத்துக் கொள்கிறார். சேதுபதியை கட்டாயப்படுத்தி தமிழின் அப்பா உள்ளே அழைத்து வருகிறார். அப்போது அப்பத்தா, சேர்ந்து இருக்க வேண்டியவர்கள் பிரிந்து இருக்கிறார்கள். இதை பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று புலம்பி கொண்டிருக்கிறார். சேது, எல்லாத்துக்கும் காரணம் தமிழ்செல்வி தான் என்று சண்டை போடுகிறார். தமிழ், என் மீது வீண் பலி போட தேவையில்லை. நான் யாருக்கும் போன் செய்யவில்லை என்று அடித்து பேசுகிறார். மாணிக்கம், நீ போன் பண்ணி தான் நான் ஜெனிக்கு கல்யாணத்தைசெய்து வைத்தேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
மீண்டும் மீண்டும் தமிழ் செல்வி என் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்கிறார். ஒரு கட்டத்தில் சேது, நீ சொல்லவில்லை என்றால் வேறு யாராவது உன் குரலில் பேசி இருப்பார்களா? என்று கேட்கிறார். உடனே தனம், இந்த வேலையை ஐஸ்வர்யா செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவள் தான் வீட்டில் உள்ள எல்லோரையும் போலவே பேசி காண்பித்தார். ஐஸ்வர்யா தான் என்னுடைய அக்காவின் குரலில் அப்பாவிடம் பேசி இருக்கணும் என்ற அடித்து சொல்கிறார். இதனால் சேதுவிற்கு ஐஸ்வர்யாவின் மீது சந்தேகம் வருகிறது.






