விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஆறுமுகம், ஏதோ சொல்லி சமாளித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே கல்யாணத்திற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் சேதுவை பார்த்து தமிழ்ச்செல்வி, மாப்பிள்ளை பற்றி விசாரித்தீர்களா? என்று கேட்டார். அதற்கு சேது, உனக்கு என்னதான் பிரச்சனை என்று கேட்டார். அப்போது தமிழ்செல்வி, மாப்பிள்ளை பற்றி தன் அப்பா சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். இதைக் கேட்டவுடன் சேது கோபப்பட்டு தமிழ்செல்வியை தான் திட்டினார்.

ராஜாங்கம் செல்வதால் கருப்பு வீட்டிற்கு வந்தார். பின் கருப்பு சேதுக்கிடையே இருக்கும் பிரச்சனையை அறிந்து கொண்ட ராஜாங்கம் சேதுவை வர வைத்து பேசி இருந்தார். பின் சேது- கருப்பு இருவருமே சேர்ந்து விட்டார்கள். அதற்கு பின் சேது, மாப்பிள்ளையை பற்றி ஒவ்வொரு உறவினர்களிடமும் விசாரித்தார். ஆனால், அதற்கு முன்பே மாப்பிள்ளை அப்பா தன் மகனைப் பற்றி பெருமையாக பேச வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனால் சேதுவிடம் மாப்பிள்ளை பற்றி எந்த ஒரு தவறான செய்தியும் கிடைக்கவில்லை.
சின்ன மருமகள் சீரியல்:
அதற்குப்பின் சேது விசாரிப்பதை அறிந்து கொள்கிறார் மாப்பிள்ளையின் அப்பா. பின் சேதுவுக்கு போன் செய்த மாப்பிள்ளை அப்பா, திருமண நேரத்தில் இப்படி செய்யாதீர்கள். எங்களுக்கு என்று ஒரு கௌரவம் இருக்கிறது என்று சொல்வதால் சேது அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் ஆறுமுகத்திற்கு போன் செய்த கண்மணி, இன்னும் ஒரு நாளில் எனக்கு கல்யாணம். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள். இரண்டு பேரும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிடலாம் என்று சொன்னார். இதைக் கேட்டு ஆறுமுகம் அதிர்ச்சி ஆனார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, மாப்பிள்ளை பற்றிய உண்மை வெளியே தெரிந்து விடுமா என்று தன் மகளிடம் புலம்பிக் கொண்டிருந்தார். அதற்கு ஈஸ்வரி மகள், மாப்பிள்ளை நல்லவர் தானே என்று கேட்டார். அதற்கு ஈஸ்வரி, அது தெரியாது. எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்று இந்த சம்மந்த்தை ஒத்துக் கொண்டேன் என்று புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியை பார்த்த கருப்பன், வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். அதனால் தமிழ் சந்தோஷப்படுகிறார். அந்த சமயம் பார்த்து ஓட்டலின் ஓனர் திட்டியதால் தமிழ் வேலைக்கு சென்று விட்டார். பின் தமிழ் செல்வி செய்யும் வேலை பார்த்து கருப்பன் ரொம்பவே வருத்தப்பட்டார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி, கருப்பனிடம் பேசி இருந்தார். அப்போது தமிழ், கண்மணிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ரொம்ப மோசமானவன். அதைப்பற்றி சேதுவிடும் சொன்னேன். ஆனால், எப்படியோ மாப்பிள்ளை வீட்டில் தெரிந்து கொண்டு மாப்பிள்ளை நல்லவர் என்பது போல சொல்லி வைத்திருந்தார்கள். நாம் தான் கண்மணியின் வாழ்க்கைக்காக உண்மையை கண்டுபிடிக்கணும் என்று சொல்வதால் கருப்பன் ஒத்துக்கொண்டார். இதை எல்லாம் ஒளிந்து கேட்ட தாமரை, தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். அப்போது தாமரை மாப்பிள்ளை பற்றி விசாரித்து நான் நல்ல பெயர் வாங்கணும் என்றார்.
கடைசியில் சேது, ஈஸ்வரியை சந்தித்து மாப்பிள்ளை பற்றி விசாரித்தார். அதற்கு ஈஸ்வரி, ஏதேதோ சொல்லி அனுப்பி வைத்தார்.
http://youtube.com/watch?v=gZhi_dDF-r0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கண்மணியின் கல்யாணத்திற்காக எல்லோருமே கிளம்புகிறார்கள். இன்னொரு பக்கம் தாமரை, தமிழ் இருவரும் தனித்தனியாக மாப்பிள்ளையின் உண்மை முகத்தை கண்டுபிடிக்க ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார்கள். கண்மணி ஆறுமுகத்தை அழைத்துக் கொண்டு மண்டபத்திற்கு செல்லாமல் பெட்ரோல் போடுவதாக பொய் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்கள். கோயிலில் கண்மணி, ஆறுமுகம் திருமணம் நடக்க இருக்கிறது. இன்னொரு பக்கம் மண்டபத்தில் கண்மணி வரவில்லை என்று எல்லோருமே பதறிக் கொண்டிருக்கிறார்கள்.






