விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா, தன்னை ஏமாற்றியதால் போஸின் மீது கடும் கோபத்தில் இருந்தார். அதோடு கல்யாணத்தை இப்போது நிறுத்த வேண்டாம் மனமேடையில் நிறுத்தி மொத்த சபையின் முன்பு போஸை அவமானப்படுத்த வேண்டும் என்றெல்லாம் யோசித்தார். இன்னொரு பக்கம் மலர், படிக்கப் போவதால் மருதாணி அரைத்து எல்லோரும் வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தமிழ், தன் கணவருடன் சேர்ந்து மருதாணி வைத்ததெல்லாம் நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டார்.

வீட்டில் போஸின் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. எல்லோருமே ஒவ்வொரு வேலையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தார்கள். மலர், தன்னுடைய முதல் நாள் டுடோரியல் வகுப்பிற்கு செல்ல தயாரானார். தமிழ்செல்வி, வாழ்த்துக்கள் சொல்கிறாள்.. இன்னொரு பக்கம் சேது, வண்டு கடிக்கு மருந்து கண்டுபிடித்த கிராமத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கிருந்த ஒரு சித்தர், அவரின் மகள் இருவரும் போஸ், தமிழின் தலையில் அடித்து மருந்தை எடுத்துக்கொண்டு போன விஷயத்தை சொன்னார்கள்.
சின்ன மருமகள்:
இதைக்கேட்டு சேதுவிற்கு ஷாக் ஆனது. பின் சேது, போஸ்- தமிழ் புகைப்படத்தை காண்பித்து அவர்களா என்று உறுதி செய்து கொள்கிறார். இன்னொரு பக்கம் கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்ற பயத்தில் போஸ் தயாராகி இருந்தார். ஈஸ்வரியும் புலம்பி கொண்டு இருந்தார். அப்போது சாவித்ரி, தாமரை இருவரும் போஸை வெறுப்பேற்றினார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, போஸின் முகத்திரையை கிழிக்க அந்த சித்தரையும் அவருடைய மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் ஈஸ்வரி, என்ன நடக்குமோ? என்ன பிரச்சனை ஆகுமோ? என்ற பயத்திலேயே புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது பெண் வீட்டில் இருந்து எல்லோருமே தயாராகி வருகிறார்கள். அதை பார்த்து ஈஸ்வரிக்கு சந்தோசமாக இருக்கிறது. தாமரை, சாவித்திரிக்கு ஒண்ணுமே புரியவில்லை, குழப்பத்தில் இருக்கிறார்கள். பின் காவியாவை ரூம்க்கு =
அழைத்து சென்ற ஈஸ்வரி, உனக்கு பெரிய மனசு. போஸை மன்னித்துவிடு. அவன் ஒழுங்காக இருப்பான் என்றெல்லாம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே சாவித்திரி- தாமரை இருவருமே ரூமிற்கு வந்து விடுகிறார்கள். அப்போது போஸை பற்றி ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விடுகிறார்கள். இதனால் சாவித்திரி, ஈஸ்வரி இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் காவியா கேட்கவில்லை. அவர் காதில் ஹெட்செட் போட்டிருக்கிறார். பின் காவியா,
கல்யாணத்தை எப்ப நிறுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மகனுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ஈஸ்வரி ஆடிப் போகிறாய். சித்ரா, எப்படியாவது அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தையாவது வாங்கணும். சேதுவை உண்மை சொல்ல விடக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






