விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஷ் பிச்சை கொடுத்த பணத்தில் துணியை வாங்கி போட்டுக் கொண்டார்கள்.
அந்த சமயம் பார்த்து அந்த வீட்டின் ஓனர் வாடகை கட்டவில்லை என்ற பிரச்சனை செய்ததால் தாமரை- சாவித்திரி இருவருமே காமேஸ் இருக்கும் கோயிலுக்கு வந்து விட்டார்கள். பின் தாமரை நடந்ததை சொல்லி பிச்சையிடம் சண்டை போட்டார். காமேஸ், நான் டைம் வாங்கிக் கொண்டு வருகிறேன். இங்கே உட்காரு என்று பிச்சை எடுக்கும் இடத்தில் உட்கார வைத்து விட்டார். தாமரை- சாவித்ரி இருவரும் பிச்சைக்காரர்கள் என்று கோயிலுக்கு வருபவர்கள் காசு போட்டார்கள். இதனால் இருவருமே கத்தி கலாட்டா செய்தார்கள்.

ராஜாங்கம் காவடி எடுக்க சொல்லி பரிகாரம் செய்வதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக ஈஸ்வரி, மோகனாவிடம் விசாரித்தார். மோகனா முதலில் தயங்கினாலும் பின் உண்மையை சொல்லி விட்டார். தமிழை வெளியே துரத்துவது போல் கனவு கண்டதால் தான் இந்த பரிகாரம் என்று தெரிந்ததும் ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் சாவித்திரி- தாமரை இருவரும் எப்படி ஆவது ராஜாங்கம் வீட்டிற்குள் வரவேண்டும் என்று புலம்பி கொண்டிருந்தார்கள். அப்போது காமேஷ் பிச்சை, என் ஒருவரால் எல்லோரும் சம்பாதிக்க முடியாது.
சின்ன மருமகள்:
நீங்கள் ஒவ்வொரு கோயிலில் உட்கார்ந்து பிச்சை எடுங்கள். அப்போதுதான் சாப்பிட முடியும் என்று சொல்வதால் இருவருக்குமே பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் சேது, தமிழுக்காக ஒரு பரிசு கொடுத்தார். அதில் சேது, எப்பவுமே தமிழை விட்டு பிரிய மாட்டேன் என்று சேது வாக்குறுதி எழுதியிருந்தார். அந்த பேப்பரில் சேது கையெழுத்து போட்டு இருந்தார். பின் தமிழ்ச்செல்வி அதில் கையெழுத்து போட்டார். இருவரும் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் காவடி எடுப்பதற்கு ராஜாங்கத்தின் குடும்பத்தில் உள்ள எல்லோருமே தயாராகி வந்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பரிகாரத்தை செய்ய கிளம்பினார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே காவடி எடுக்க தயாராகி இருக்கிறார்கள். ராஜாங்கம், சூரிய கிரகணம் முடிவதற்குள் இந்த பரிகாரத்தை செய்யணும் என்கிறார். பின் வீட்டில் எல்லோருமே காவடி தூக்கிக்கொண்டு கோயிலுக்கு செல்கிறார்கள். முருகருடைய பாட்டு பாடி ஆட்டம் பாட்டம் என்று சந்தோஷமாக போகிறார்கள். அப்போது சாவித்திரி, காவடியில் கலந்து கொள்ள தன் தாயிடம் கெஞ்சுகிறார்.

சீரியல் ட்ராக்:
ராஜாங்கத்தின் காலில் விழுந்து சாவித்ரி கெஞ்சுகிறார். ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. பின் எல்லோருமே சந்தோசமாக காவடி எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஈஸ்வரிக்கு இதெல்லாம் பார்த்து பயங்கர கடுப்பாகிறது. அந்த சமயம் பார்த்து ராஜாங்கத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. ராஜாங்கம் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழ பார்க்கிறார். சேது தன் தந்தையை கவமனாக பார்த்துக் கொள்கிறார். அப்பத்தா எல்லோருமே பதறுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






