விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சக்திவேலுக்கு போன் செய்து தன்னுடைய திட்டத்தை பற்றி சின்ன பாண்டி சொன்னார். சக்தி தயங்கினாலும் பிறகு ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி வருவதற்குள் போனை ஈஸ்வரி உள்ளே வைத்து விட்டார். தமிழ்-சேது இருவருமே எமோஷன் ஆக ஜெனியின் காதலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் சின்ன பாண்டி- சக்தி இருவரும் ஜெனியின் வீட்டிற்குள் வந்தார்கள். ஜெனியின் அப்பா அந்த சமயம் பார்த்து வெளியே வந்தார்.

சின்ன பாண்டி, ஜெனியை அவருடைய வீட்டிற்கு தெரியாமல் அழைத்து சென்று விட்டார். பின் கோவிலில் ஜெனி- சக்தி இருவருக்கும் சின்ன பாண்டி திருமணம் செய்து விட்டார். திருமணம் முடிந்தவுடன் சின்னபாண்டி, ராஜாங்கம் வீட்டின் கெஸ்ட் ஆவுஸில் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்து விட்டார். ஜெனி வீட்டில் இல்லை என்று தெரிந்த உடனே ஜெனியின் அப்பா, அம்மா இருவரும் பதறி கொண்டு ராஜாங்கம் வீட்டிற்கு வந்தார்கள். ஜெனின் அப்பா தாமஸ், ராஜாங்கத்தையும் அவருடைய குடும்பத்தையும் ரொம்ப மோசமாக பேசினார்.
சின்ன மருமகள்:
இதனால் கோபத்தில் சேது சண்டைக்கு போனார். ஒரு கட்டத்தில் ராஜாங்கம், தமிழிடம் விசாரித்தார். தமிழ், எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நாங்கள் எதுவும் செய்யவில்லை என்றார். பின் ஈஸ்வரி, கெஸ்ட் ஹவுஸில் யாரோ இருந்தார்கள் என்றார். பின் மொத்த குடும்பமே கெஸ்ட் ஹவுஸ்க்கு போனார்கள். முதலில் சின்ன பாண்டி வந்தார். சின்னபாண்டி பின்னாடியே ஜெனி- சக்தி இருவரும் மாலை கழுத்துமாக வந்தார்கள். அவரைப் பார்த்தவுடன் ராஜாங்கம், தமிழ்செல்வி எல்லோருமே ஷாக் ஆனார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சின்ன பாண்டி, தமிழ்ச்செல்வி போன் பண்ணி சொன்னதால் தான் நான் ஜெனி, சக்திக்கு திருமணம் செய்து வைத்தேன். அதோடு ராஜாங்கம் சம்மந்தி தான் இதை எல்லாம் செய்ய சொன்னதாக தமிழ்ச்செல்வி சொன்னார். அதனால் தான் கெஸ்ட் ஹவுஸ்க்கு அழைத்து வந்தேன் என்று சொல்கிறார். தமிழ்செல்விக்கு ஒன்றுமே புரியவில்லை. மொத்த குடும்பமே ஷாக் ஆகி நிற்கிறது. சேது உண்மை என்னவென்று தெரியாமல் தமிழை திட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:
ராஜாங்கம் பயங்கரமாக கோவப்படுகிறார். ஒரு கட்டத்தில் தாமஸ், எங்க வீட்டு பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஜெனி, சக்தி இருவரையும் அழைத்து சென்று விடுகிறார். வீட்டில் எல்லோருமே தமிழை தான் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ், தன் தரப்பு நியாயத்தை எவ்வளவு எடுத்து சொல்லியுமே யாரும் கேட்கவில்லை. அப்போது டிவியில் தமிழ்ச்செல்வி செய்த வேலையால் இருதரப்பு ஜாதியினருக்கும் கலவரம் வெடிப்பதாக நியூஸ் வருகிறது. இதனால் ராஜாங்கம் ஷாக் ஆகிறார்.






