விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் திட்டியுமே யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பயங்கரமாக சிரித்தார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி தான் நினைத்தது நடந்து விட்டது என்று தன் மகளுடன் சேர்ந்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அதோட ஆட்டம் பாட்டம் என்று ஈஸ்வரி- சித்ரா இருந்தார்கள். இன்னொரு பக்கம் சாவித்திரி- தாமரை இருவரும் எங்கு தூங்குவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். காமேஷ், தான் தங்கும் இடத்தை காண்பித்தார். அதை பார்த்து தாமரைக்கு பயங்கர கோபம் வருகிறது.

தாமரை, சாவித்திரி இருவரும் தங்குவதற்காக காமேஷ் ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார். அதை பார்த்தவுடன் தாமரை பயங்கரமாக கோபப்பட்டார். இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அந்த இடத்திலேயே இருவரும் தங்கிக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் சேது-தமிழ் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது சேது கனவில், தமிழ்செல்வியை வீட்டை விட்டு துரத்துகிறார்கள். சேது, தமிழ்ச்செல்வியின் மீது பயங்கரமாக கோபப்பட்டார்.
சின்ன மருமகள்:
பின் இந்த கனவை கண்டு சேது பயந்து எழுந்தார். எதற்காக இப்படி எல்லாம் கனவு வருகிறது என்று சேது புலம்பினார். இன்னொரு பக்கம் காமேஷ் பிச்சை தன்னுடைய முதலிரவுக்கு அழகாக ரூமை தயார் செய்து வைத்தார். அப்போது வந்த தாமரை அந்த செட்டப்பை பார்த்து கொந்தளித்து பிச்சையிடம் சண்டை போட்டார். அதோடு காமேஷ் பிச்சையை ரூமை விட்டு வெளியே துரத்தினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, அப்பத்தாவிடம் தான் கண்ட கனவை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பத்தா, நானும் அதே மாதிரி கனவு கண்டேன் என்று நடந்ததை சொல்கிறார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு ராஜாங்கம், எனக்கும் அந்த கனவு வந்தது என்று சொல்கிறார். இதனால் அப்பத்தா ரொம்பவே வருத்தப்படுகிறார். எதற்காக இந்த கஷ்ட காலம் என்று புலம்புகிறார்.
இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, ஜெனியின் காதலர் சக்தியை சந்தித்து பேசுகிறார். அப்போது சக்தி, இனிமேல் இந்த விஷயத்தில் நாம் எதுவும் செய்ய வேண்டாம். ஏதாவது செய்தால் ஜெனிக்கு சீக்கிரம் கல்யாணம் ஏற்பாடு செய்து விடுவார்கள்.

சீரியல் ட்ராக்:
நான் எதுவாக இருந்தாலும் சொல்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் காமேஸ் பிச்சை முதலிரவு நடந்தது போல செட்டப் செய்து சாவித்திரியை வெறுப்பேற்றுகிறார். இதனால் கோபப்பட்ட சாவித்திரி, தாமரை இடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். தாமரை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்கிறார். பின் காமேஷ் பிச்சை அவர்கள் சாப்பிட சாப்பாடு, துணிக்கு பணம் கொடுத்துவிட்டு தன்னுடைய தொழிலுக்கு செல்கிறார். இதனால் சாவித்திரி- தாமரை இருவரும் கொந்தளிக்கிறார்கள். பின் ராஜாங்கம், அப்பத்தா இருவரும் ஒரு சாமியாரை சந்தித்து தாங்கள் கண்ட கனவை பற்றி சொல்கிறார்கள். அதற்கு அவர், இதெல்லாம் விதியின் விளையாட்டு. எல்லாத்துக்கும் பரிகாரம் இருக்கிறது என்று சோலியை உருட்டுகிறார்.






