விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஆறுமுகம் குடித்து வந்ததை அறிந்த கண்மணி ரொம்பவே கோபப்பட்டு திட்டினார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். மழை வந்ததால் சேது உள்ளே தூங்கினார். லைட் எரிவதால் சேது ஆப் செய்து விட்டார். உடனே தமிழ்ச்செல்வி சத்தமாக கத்தி கத்தி படித்தார். மறுநாள் காலையில் தமிழ்ச்செல்வி தேர்வு எழுதப் போவதால் youtube சேனல் வந்து வீடியோ எடுத்தார்கள். அப்போது அப்பத்தா வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ்ச்செல்வியை தேர்வுக்கு அழைத்து செல்வதற்காக எல்லோரும் தயாராக இருந்தார்கள். சேதுக்கு விருப்பமில்லை என்றாலும் தன் அப்பாவின் கட்சிக்காக தமிழ்செல்வியை தூக்கிக்கொண்டு தேர்வு எழுத சென்றார். பின் காரில் வரும் வழியில் தமிழ்ச்செல்விக்கு சாப்பாடு ஊட்டி விடுவது, அவளை கவனமாக கவனித்துக் கொள்வது என்றெல்லாம் சேது செய்தார். இதையெல்லாம் பார்த்து அப்பத்தா சந்தோசப்பட்டார். தமிழ்ச்செல்வி, சேதுவை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் கல்லூரிக்கு சேது, தமிழ், ராஜாங்கம் எல்லோருமே வந்துவிட்டார்கள். அப்போது பேட்டியில் ராஜாங்கத்தை மாற்றி மாற்றி கேள்வி கேட்டார்கள். ராஜாங்கம், தமிழை பற்றி பெருமையாக பேசி வாழ்த்து சொல்லி அனுப்பினார். அதற்குப்பின் தேர்வு எழுதும் அறைக்கு தமிழை சேது அழைத்து சென்றார். அது மட்டும் இல்லாமல் தமிழ் பக்கத்திலேயே உட்கார்ந்து சேது கவனித்துக் கொண்டார். தமிழ்ச்செல்வி சொல்லும் எல்லா வேலைகளையும் சேது செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் youtube சேனல் வீடியோ எடுத்துக் கொண்டே இருந்தது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழின் தேர்வுகள் முடியும் வரை சேது தூக்கிக் கொண்டு சென்று வருகிறார். இதனால் தமிழ் ரொம்ப சந்தோஷப்படுகிறார். இதையெல்லாம் பார்த்த ஈஸ்வரி, தாமரையின் அம்மா, தாமரை எல்லோருமே கோபப்பட்டு தமிழிடம் வம்பு இழுக்கிறார்கள். அதற்கு தமிழுமே பதிலடி கொடுக்கிறார். கடைசி தேர்வுக்கு தமிழை அழைத்துக் கொண்டு சேது சென்றிருக்கிறார். அங்கு ஒரு பிணத்தை வைத்து பிராக்டிகல் எக்ஸாம் நடக்கிறது. அதை பார்த்து சேது பதறிப் போகிறார். அதற்குப்பின் கேம்ப் மூன்று நாள்கள் போகணும் என்று சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
இதனால் கோபத்தில் சேது முடியாது என்று தமிழிடம் சொல்லிவிடுகிறார். இன்னொரு பக்கம் ராஜாங்கத்தை பழிவாங்க வேண்டும் என்று அவருடைய எதிரியும் போஸும் சேர்ந்து சேது-தமிழின் விவாகரத்தை பற்றி பிரஸ்மீட்டில் பேச சொல்கிறார்கள். அப்போது பேட்டி எடுப்பவர்கள் ராஜாங்கத்திடம், சேது-தமிழ் விவாகரத்தை பற்றி கேட்கிறார்கள். ராஜாங்கம் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். உடனே அங்கு வந்த தமிழ், அதற்கு பதில் நான் சொல்கிறேன் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






