விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கல்லூரியில் ஜெனி, தன்னுடைய காதலை பற்றி தமிழிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அப்போது வந்த ஜெனியின் காதலர் ஆறுதல் சொன்னார். பின் தமிழிடம் ஜெனியை பத்திரமாக பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு காதலர் அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் வீட்டில் மலர் தனியாக இருப்பதை பார்த்த போஸ் அவரிடம் தப்பாக நடந்து கொள்ள உள்ளே வந்தார். பின் போஸ் ரொம்ப காதலாகவும் அன்பாகவும் மலரிடம் பேசி இருந்தார். ஆனால், மலர் கோபப்பட்டு போசை தள்ளி விட்டார்.

போஸ் மீண்டும் மலரிடம் நெருக்கமாக செல்ல பார்த்தார். கோபத்தில் மலர்,போசை வெளியே தள்ளி சாணியை கரைத்து மூஞ்சியில் ஊற்றி விட்டார். இதனால் போஸ் அசிங்கப்பட்டு அங்கிருந்து சென்று குளிக்கப் போனார். அப்போது வந்து ஈஸ்வரி, என்னாச்சு? என்று கேட்க, போஸ் நடந்ததை சொன்னார். கோபத்தில் ஈஸ்வரி, போசை அடித்தார். அதற்குப் பின் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மலர், தமிழ் இருவருமே வந்தார்கள். தமிழ், மலர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி வக்கீல் படிக்க ஆசைப்படுகிறார்.
சின்ன மருமகள் சீரியல்:
அதற்கு நீங்கள் தான் அனுமதி கொடுக்கணும் என்றார். இதை கேட்ட ஈஸ்வரி, கொந்தளித்து பயங்கரமாக திட்டினார். அதற்கு தமிழ், மலர் இந்த வீட்டு மருமகள் கிடையாது. அதற்காக அவர் வேலைக்காரியும் கிடையாது என்று சொல்கிறார். இதைக் கேட்ட சாவித்திரி, பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். நாங்கள் மலர் படிக்க சப்போர்ட்டாக இருப்போம் என்றெல்லாம் ஈஸ்வரியை வெறுப்பேற்ற செய்தார். ராஜாங்கம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாவித்திரி, நான் மலருக்காக தான் சப்போர்ட் செய்வேன். பெண் கல்வி ரொம்ப முக்கியம் என்றெல்லாம் ஈஸ்வரி வெறுப்பேற்றுவதற்காகவே பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஈஸ்வரி, சாவித்திரிக்கு இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டை நடக்கிறது. உடனே ராஜாங்கம், எல்லோரும் அமைதியாக இருங்கள். மலர் மேற்கொண்டு படிக்கட்டும். 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து விட்டு வா, உன்னை வக்கீலுக்கு நான் படிக்க வைக்கிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு மலருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் போஸ் பார்ட்டி வைப்பதால் சேது, கருப்பன் எல்லோருமே கலந்து கொண்டு தண்ணி அடிக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து போன் செய்த காவியா, உடனடியாக ஜூஸ் கடைக்கு வர சொல்கிறார். இதனால் போஸ், துண்ட காணோம், துணியை காணோம் என்று உளுந்து அடித்துக் கொண்டு ஓடுகிறார். பின் போன இடத்தில் காவியா, கண்களில் மட்டும் தான் பேசணும். எனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும் என்றெல்லாம் நிறைய கண்டிஷன் போடுகிறார். போஸ் வேற வழியில்லாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் சேது, போஸ் பொண்டாட்டி தாசன் ஆக மாறிக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் கிண்டல் செய்கிறார். இதை கேட்ட தமிழ், ஒரு காலத்தில் நீங்களும் பொண்டாட்டி தாசன் ஆக இருந்தவர் தான் என்று சொல்வதால் பிளாஷ் பேக்கை காண்பிக்கிறார்கள்.






