விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்-சேதுவின் திருமண நாளுக்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடக்கிறது. பின் தமிழ்-சேது இருவரும் ஜோடியாக வந்தார்கள். அதை பார்த்து அப்பத்தா-ராஜாங்கம் சந்தோசப்பட்டார். பின் பத்து ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க எல்லோரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். கோயிலில் திருமண ஜோடிகளுக்கு கொடுக்கும் சீர்வரிசியை பார்த்து ஈஸ்வரி, சாவித்திரி இருவரும் வாயை பிளந்தார்கள்.

கோயிலில் தமிழ்-சேது திருமண நாளை முன்னிட்டு கோலாகலமாக 10 ஜோடிகளுக்கான இலவச சீர்வரிசைகள் இறங்கி இருக்கிறது. 10 ஜோடிகளையும் திருமணம் செய்து வைப்பதற்கு கோவிலுக்கு அழைத்து வந்தார்கள். அதில் இரண்டு ஜோடிகள் தாமரை- சாவித்திரி ஏற்பாடு செய்து வைத்த நபர்கள். எட்டு ஜோடிகளுக்கு நல்லபடியாக திருமணம் நடந்து முடிகிறது. சேது- தமிழ் இருவரும் தான் நடத்தி வைத்தார்கள். சாவித்திரி அனுப்பிய இரண்டு ஜோடிகள் வந்து நிற்கும்போது காவியா அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். எல்லோருமே ஷாக் ஆகி காவியாவை கேள்வி கேட்டார்கள். அப்போது காவியா, இவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
சின்ன மருமகள்:
சீர்வரிசைக்கு ஆசைப்பட்டு தான் சாவித்திரி- தாமரை இருவரும் இப்படி செய்தார்கள் என்று எல்லா உண்மையும் சொல்லிவிட்டார். இதனால் ராஜாங்கம் பயங்கர கோபப்பட்டார். அப்பத்தா, சாவித்திரி- தாமரையை திட்டி கோயிலை விட்டு வெளியே போக சொன்னார். பின் காவியா, நீங்கள் பயப்பட தேவையில்லை. இரண்டு வசதி வாய்ப்பற்ற ஜோடிகளை அப்பாவிடம் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டேன். அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். ராஜாங்கம், காவியாவிற்கு நன்றி சொன்னார். ஈஸ்வரி, இதுதான் சந்தர்ப்பம் என்று காவியாவை புகழ்ந்து பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நல்லபடியாக பத்து ஜோடிகளுக்கு திருமணம் நடந்து முடிகிறது.
அதற்குப்பின் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் திருமண பரிசாக 15 லட்சம் ரூபாய் தொகை உள்ள பொருட்களை ராஜாங்கம் கொடுக்கிறார். அதற்குப்பின் சாவித்திரி- தாமரை இருவரும் அசிங்கப்பட்டதை நினைத்து ஈஸ்வரி, சித்ரா இருவரும் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதோடு காவியாவையும் பாராட்டினார்கள். அதற்கு காவியா, இதை யாரு செய்திருந்தாலும் நான் சொல்லியிருப்பேன் என்று ஈஸ்வரி மூக்கை உடைத்து விட்டு செல்கிறார். அதற்குப்பின் எல்லோருக்குமே சிறப்பான அன்னதானம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்,

சீரியல் ட்ராக்:
இதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று சாவித்திரி- தாமரை இருவருமே சேர்ந்து திட்டம் போடுகிறார்கள் பின் இருவரும் பல்லி, கரப்பான் பூச்சி எல்லாம் சாம்பாரில் போட்டு விடுகிறார்கள். எல்லோரும் சாப்பிடும் நேரம் பார்த்து சாவித்திரி, யாரும் சாப்பிடாதீர்கள். சாப்பாட்டில் பல்லி விழுந்திருக்கிறது என்று சத்தம் போடுவதால் எல்லோருமே சாப்பாடு செய்யும் இடத்திற்கு வந்து பார்க்கிறார்கள். சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து மொத்த குடும்பமே சாக்கில் இருக்கிறது.






