விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் அப்பத்தா, அவளுடைய நியாயத்தை கேட்க வந்திருக்கிறாள். உரிமையை கேட்கிறாள் என்றார். தமிழ்ச்செல்வி, அதெல்லாம் ஒன்றும் இல்லை. என்னை அறுத்து விட்டுட்டு அவர் எத்தனை கல்யாணம் வேனாலும் பண்ணிக்கொள்ளட்டும். எனக்கு அதில் கவலை இல்லை. எனக்கு அவர் கட்டின தாலி ரொம்ப பாரமாக இருக்கிறது. என்னை அத்து விடுங்கள் என்றார். இதைக் கேட்டு எல்லோருமே ஆடி போகிறார்கள். அப்பத்தா, எதற்காக இப்படி முடிவெடுத்தாய்? என்றார். தமிழ்செல்வி,எனக்கு இந்த வாழ்க்கையில் விருப்பமில்லை என்றார்.

தமிழ், என்னை அத்துவிட்டால் நான் யாருடைய வாழ்க்கையிலும் விஷயத்திலும் தலையிட போவதில்லை என்றார். தமிழின் அப்பா- அம்மா எல்லோருமே வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால், தமிழ் தன் முடிவில் உறுதியாக இருந்தார். சேது, எங்கள் இருவரையும் அத்து விடுங்கள் என்று கொந்தளித்தார். ஊர் தலைவர்கள் எல்லோருமே சேர்ந்து தமிழ்-சேது இருவரையும் பிரித்து விட்டார்கள். இனி சேது- தமிழ் இரண்டு குடும்பத்திற்குமே சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதை எல்லாம் பார்த்த அப்பத்தா ரொம்பவே நொறுங்கிப் போனார்.
சின்ன மருமகள்:
தமிழ்செல்வியும் தன் கழுத்தில் இருக்கும் தாலியை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
அதற்குப் பின் சேது- ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதை பார்த்து அப்பத்தா, இவ்வளவு அநியாயம் செய்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. இனி உங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் உங்களை அத்து விடுகிறேன் என்று அங்கு இருந்து கிளம்பி போனார். ஈஸ்வரி, அப்பத்தாவ அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றார். தமிழ்செல்வியின் வீட்டிற்கு வந்த அப்பத்தா, கோவிலில் நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனல் ஆக அழுதார். தமிழ்ச்செல்வி, அப்பத்தாவிற்கு ஆறுதல் சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாவித்திரி, தாமரை இருவரும் திருமணத்தை நிறுத்துவதற்காக சேதுவிடம் பேசுகிறார்கள். இதைக்கேட்ட ஈஸ்வரி அந்த இடத்திற்கு வந்து சேதுபதியை அங்கிருந்து அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் ரூமில் சேது தனியாக இருப்பதை அறிந்த ஐசு ரொம்ப அன்பாகவும் அக்கறையாகவும் பேசுகிறார். ஆனால் சேதுவிற்கு அதில் விருப்பமே இல்லை. சேதுவுக்கும் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று யோசித்து கொண்டு இருக்கிறார். ஐசு நெருங்கி வரும் போதெல்லாம் சேது திட்டி அனுப்பி விடுகிறார். இதைப் பற்றி ஐசு, ஈஸ்வரிடம் சொல்லிக் புலம்புகிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய படிப்பு விஷயத்தில் மட்டும் தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அப்பத்தா வீட்டில் உள்ள எல்லோருமே தமிழ் வாழ்க்கையை பற்றி எடுத்துச் சொல்லிப் பார்க்கிறார்கள். ஆனால், தமிழ் செல்வி அதை கேட்பதாகவே இல்லை. அதற்குப்பின் சேது, இந்த திருமணத்தை நிறுத்த முடியுமா? இப்போதைக்கு திருமணம் வேண்டாம். ஐசுவின் அப்பா அம்மாவிடம் எடுத்து சொல்லி புரிய வையுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். ஈஸ்வரி, அதெல்லாம் முடியாது. எல்லாம் ஏற்பாடுகளும் நடந்துவிட்டது. நாளை உனக்கும் ஐசுவுக்கும் திருமணம் என்று சொல்கிறார். இதை கேட்ட ஐசு, சேது காலில் விழுந்து தயவுசெய்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கதறி அழுகிறார். பின் சாவித்திரி, ஐஸ்வர்யாவை கடத்த திட்டம் போடுகிறார்.






