விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, தாமரை இருவரும் திருமணத்தை நிறுத்துவதற்காக சேதுவிடம் பேசி இருந்தார்கள். இதைக்கேட்ட ஈஸ்வரி அந்த இடத்திற்கு வந்து சேதுபதியை அங்கிருந்து அனுப்பி விட்டார். அதற்குப்பின் ரூமில் சேது தனியாக இருப்பதை அறிந்த ஐசு ரொம்ப அன்பாகவும் அக்கறையாகவும் பேசி இருந்தார். ஆனால் சேதுவிற்கு அதில் விருப்பமே இல்லை. சேதுவுக்கும் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று யோசித்து கொண்டு இருந்தார். ஐசு நெருங்கி வரும் போதெல்லாம் சேது திட்டி அனுப்பி விட்டார். இதைப் பற்றி ஐசு, ஈஸ்வரிடம் சொல்லிக் புலம்பினார்.

இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய படிப்பு விஷயத்தில் மட்டும் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்பத்தா வீட்டில் உள்ள எல்லோருமே தமிழ் வாழ்க்கையை பற்றி எடுத்துச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், தமிழ் செல்வி அதை கேட்பதாகவே இல்லை. அதற்குப்பின் சேது, இந்த திருமணத்தை நிறுத்த முடியுமா? இப்போதைக்கு திருமணம் வேண்டாம். ஐசுவின் அப்பா அம்மாவிடம் எடுத்து சொல்லி புரிய வையுங்கள் என்றார். ஈஸ்வரி, அதெல்லாம் முடியாது. எல்லாம் ஏற்பாடுகளும் நடந்துவிட்டது. நாளை உனக்கும் ஐசுவுக்கும் திருமணம் என்றார். இதை கேட்ட ஐசு, சேது காலில் விழுந்து தயவுசெய்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கதறி அழுதார். பின் சாவித்திரி, ஐஸ்வர்யாவை கடத்த திட்டம் போட்டார்.
சின்ன மருமகள்:
சேது ரவுடிகளை எல்லாம் அடித்துப் போட்டுவிட்டு தமிழ்ச்செல்வியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். போகும் வழியிலேயே அப்பத்தாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் சேது சொன்னார். அப்பத்தா, தமிழின் அப்பா அம்மா எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினார்கள். இன்னொரு பக்கம் மண்டபத்திற்கு சென்ற ஐசு,சேது-தமிழை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று இருக்கும் விஷயத்தை சொன்னார். இதைக் கேட்டு ஈஸ்வரிக்கு பயங்கர கடுப்பானது. சாவித்திரி- தாமரை இருவரும் சந்தோஷப்பட்டார்கள். பின் ஹாஸ்பிடலில் தமிழ் உறவினர்கள் வரும் வரை எதுவும் செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். சேது, எதுவுமே பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நல்லபடியாக தமிழ்ச்செல்விக்கு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது. அப்பத்தா, குழந்தையை தூக்க சொல்லி கேட்கிறார். ஆனால் சேது, தமிழ்ச்செல்வி செய்த துரோகத்தை நினைத்து அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்விக்கு மீண்டும் பிரசவ வலி வந்து அழகான பெண் குழந்தை பிறக்கிறது. ரெட்டை குழந்தை பிறந்திருப்பதால் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறது. மண்டபத்திற்கு சேது வந்ததை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். ஈஸ்வரி, சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
சாவித்திரி, நல்ல நேரம் முடிந்துவிட்டது. திருமணத்தை எல்லாம் இப்போது நடத்த முடியாது என்று சொல்கிறார். மோகனா, என்ன குழந்தை பிறந்து இருக்கிறது என்று கேட்கிறார். சேதுபதி, ஆண் குழந்தை என்று சொல்கிறார். ராஜாங்கம் சந்தோசப்படுகிறார். அதற்குப்பின் கல்யாணத்தை நடத்தியே தீர வேண்டும் என்று ஈஸ்வரி சொல்கிறார். சாவித்திரி நடத்தக்கூடாது என்று பிரச்சனை செய்கிறார். சேது எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்






