விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி- ஈஸ்வரி இருவருமே தனித்தனியாக இந்த மூன்றாவது பரிகாரம் நிறைவேறக்கூடாது என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம்
மலர், மாமா திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதை பற்றி பெருமையாக பேசி இருந்தார். தமிழ், இதன் மூலம் மற்றவர்களுக்கு நல்லது நடக்கிறது என்பதால் தான் நான் ஒத்துக்கொண்டேன். எனக்கு இந்த திருமண கொண்டாட்டத்தில் விருப்பம் கிடையாது. ஊர்மத்தியில் என்னை அவ்வளவு அசிங்கப்படுத்திவிட்டு மீண்டும் என்னால் பழையபடி இருக்க முடியாது என்று அங்கிருந்து சென்று விட்டார்.

கோலாகலமாக வள்ளி முருகன் திருமண நாடகம் நடக்கிறது. ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பத்தா, வள்ளி- முருகன் இடத்தில் சேது, தமிழை நினைத்து பார்த்து சந்தோசப்பட்டார். இன்னொரு பக்கம் சாவித்திரி, தாமரை இருவரும் இந்த நாடகத்தை எப்படி கெடுப்பது என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்திற்கு வந்த ஈஸ்வரி, மூன்றாவது பரிகாரமும் முடிந்து விட்டால் சேது- தமிழ் சேர்ந்து விடுவார்கள்.
சின்ன மருமகள்:
அதை ஏதாவது செய்து கெடுக்க வேண்டியது தானே என்றெல்லாம் ஏத்தி விட்டார்கள். உஷாரான சாவித்திரி, நீங்களே செய்ய வேண்டியது தானே. நாங்கள் திட்டுவாங்கிக் கொள்வதா? என்று அமைதியாகி விட்டார்கள். பின் தாமரை, அங்கு இருக்கும் நபரிடமிருந்து ஒரு போனை வாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து நாடக இடத்தில் பாம் இருப்பது போல நடித்தார். ஆனால், போலீஸ் தாமரையை திட்டி போனை வைத்து விட்டார். நல்லபடியாக வள்ளி முருகன் திருமண நாடகம் முடிந்துவிட்டது.

சீரியல் ட்ராக்:
நல்லபடியாக வள்ளி திருமணம் நாடகம் முடிந்து அந்த மாலையும் சேது- தமிழ் கழுத்தில் விழுந்து விடுகிறது. பின் மூன்று பரிகாரங்களும் நல்லபடியாக முடிந்ததால் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே வீட்டிற்கு போனார்கள். பின் வீட்டில் தமிழ்-சேது இருவருக்கும் முதலிரவு செட் அப் செய்து இருந்தார்கள். அதை பார்த்து தமிழ் பயங்கரமாக கோபப்பட்டார். பின் சேது, தான் செய்த தவறை உணர்ந்து ரொம்ப எமோஷனலாக அழுது பேசி மன்னிப்பு கேட்டார். ஆனால், தமிழ் ஏற்றுக்கொள்ளவில்லை. சேது சொன்ன வார்த்தை எல்லாம் நினைத்து கோபப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=ra6eSBVbm5s
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேது, தமிழின் மனதை மாற்றுவதற்காக ஒரு புடவை முழுவதும் சாரி சாரி என்று எழுதி பரிசாக கொடுக்கிறார். தமிழ் அந்த புடவையை வாங்கி கொள்கிறார். பின் தமிழ், அந்த புடவை முழுவதும் சாரி சாரி என்று எழுதி இருப்பதை பார்க்கிறார். அது மட்டும் இல்லாமல் சேது கொடுத்த புடவையை கட்டிக் கொண்டு வருகிறார். சேது ரொம்பவே மனம் உருகி மன்னிப்பு கேட்கிறார். ஆனால், தமிழ் அமைதியாகவே இருக்கிறார்.






