விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், தமிழிடம் விசாரித்தார். தமிழ், எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நாங்கள் எதுவும் செய்யவில்லை என்றார். பின் ஈஸ்வரி, கெஸ்ட் ஹவுஸில் யாரோ இருந்தார்கள் என்றார். பின் மொத்த குடும்பமே கெஸ்ட் ஹவுஸ்க்கு போனார்கள். முதலில் சின்ன பாண்டி வந்தார். சின்னபாண்டி பின்னாடியே ஜெனி- சக்தி இருவரும் மாலை கழுத்துமாக வந்தார்கள். அவரைப் பார்த்தவுடன் ராஜாங்கம், தமிழ்செல்வி எல்லோருமே ஷாக் ஆனார்கள்.

சின்ன பாண்டி, தமிழ்ச்செல்வி போன் பண்ணி சொன்னதால் தான் நான் ஜெனி, சக்திக்கு திருமணம் செய்து வைத்தேன். அதோடு ராஜாங்கம் சம்மந்தி தான் இதை எல்லாம் செய்ய சொன்னதாக தமிழ்ச்செல்வி சொன்னார். அதனால் தான் கெஸ்ட் ஹவுஸ்க்கு அழைத்து வந்தேன் என்று சொன்னார். தமிழ்செல்விக்கு ஒன்றுமே புரியவில்லை. மொத்த குடும்பமே ஷாக் ஆகி நிற்கிறது. சேது உண்மை என்னவென்று தெரியாமல் தமிழை திட்டினார்.
சின்ன மருமகள்:
ராஜாங்கம் பயங்கரமாக கோவப்பட்டார். ஒரு கட்டத்தில் தாமஸ், எங்க வீட்டு பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஜெனி, சக்தி இருவரையும் அழைத்து சென்று விட்டார். வீட்டில் எல்லோருமே தமிழை தான் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். தமிழ், தன் தரப்பு நியாயத்தை எவ்வளவு எடுத்து சொல்லியுமே யாரும் கேட்கவில்லை. அப்போது டிவியில் தமிழ்ச்செல்வி செய்த வேலையால் இருதரப்பு ஜாதியினருக்கும் கலவரம் வெடிப்பதாக நியூஸ் வருகிறது. இதனால் ராஜாங்கம் ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் நியூஸில், ராஜாங்கத்தையும் அவர் கட்சியையும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு இந்த ஜாதி கலவரத்தால் இரண்டு பேர் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்கிறார்கள். ராஜாங்கத்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஈஸ்வரி வழக்கம் போல கொளுத்தி போட்டுக் கொண்டிருக்கிறார். பின் கட்சியின் தலைவி, ராஜாங்கத்திற்கு போன் செய்து திட்டிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து சேதுவிற்கு பயங்கர கோபம் வருகிறது. தமிழை திட்டிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
தமிழ், நான் எதுவும் செய்யவில்லை என்று எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், சேது நம்பவே இல்லை. அதற்குப்பின் ஜெனியின் அப்பா தாமஸ், உங்களால் என்னை கட்சியில் இருந்து விலக்கி விட்டார்கள். எனக்கான போஸ்டிங்கும் கொடுக்கவில்லை என்கிறார். ராஜாங்கம் தன்னுடைய கட்சியில் சேர்த்துக் கொள்வதாக அறிவித்து விடுகிறார். அதற்குப் பின் தாமஸ், தன்னுடைய அடியாட்களை வைத்து சக்தியை அடித்து இழுத்து செல்கிறார். ஜெனி எவ்வளவோ கெஞ்சி கேட்கிறார். ஆனால், தாமஸ் கேட்கவில்லை. ஜெனி, தமிழிடம் நடந்ததை சொல்ல போன் செய்கிறார். அதற்குள் ஜெனி அம்மா போனை பிடுங்கி விடுகிறார்.






