விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போலீஸ், சக்தியை கொலை செய்த வழக்கில் தாமஸ், உங்களையும் கைது செய்கிறோம். அந்த கொலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தாமஸ் சொல்லி இருக்கிறார். அதனால் விசாரணைக்கு நீங்கள் வரவேண்டும் என்றார். பின் போலீஸ் ஸ்டேஷனில் ஜெனி, சக்தியை கொன்றது என்னுடைய அப்பாவும் அமைச்சர் ராஜாங்கம் தான். அவர்கள் இருவரையும் சும்மா விடாதீர்கள் என்று உண்மை அறியாமல் ஜெனி கூறிக் கொண்டிருந்தார். ஜெனி அளித்த பேட்டி எல்லாம் டிவியில் வருகிறது. அதை பார்த்து ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே கதறி அழுதார்கள்.

போலீஸ், சக்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரித்தார்கள். ராஜாங்கம், எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை. தாமஸ் கட்சி விஷயமாக பேச வர சொன்னார். அதனால் தான் வந்தேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்றார். சேது தன் அப்பாவை வெளியில் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த தமிழிடம் சக்தி இறந்து போன விஷயத்தையும், ராஜாங்கம் கைது செய்த விஷயத்தையும் சொன்னார்கள். தமிழ்செல்வி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்.
சின்ன மருமகள்:
அந்த சமயம் பார்த்து ராஜாங்கம் கட்சியின் தலைவர், சத்தி கொலை வழக்கில் ராஜாங்கத்திற்கும் சம்மந்தம் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கிவிடுகிறோம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறோம் என்றார். இதை கேட்டு அப்பத்தா நொறுங்கிப் போனார். இன்னொரு பக்கம் இந்த வழக்கை விசாரிக்க உயர் அதிகாரி ஒருவரை சிபாரிசு செய்து இருந்தார்கள். அவர், ராஜாங்கத்திடம் ரொம்ப ராங்காக நடந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் ராஜாங்கத்தை ஜெட்டி பனியன் உடன் கட்டி வைத்து அடித்தார். இதை பார்த்த சேது ரொம்பவே மனம் உடைந்து அழுதார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் உயர் அதிகாரி ராஜாங்கத்தை உண்மையை ஒத்துக் கொள் என்று அடி வெளுத்து வாங்குகிறார். ராஜாங்கம், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்கிறார். பின் இதைப்பற்றி வெளியே இருந்த ஒரு போலீஸ், சேதுவிடும் சொல்கிறார். பதறி அடித்துக் கொண்டு உள்ளே சென்ற சேது, தன் தந்தை அடி வாங்குவதை பார்த்து ரொம்பவே மனமுடைந்து போகிறார். உடனே அந்த உயர் அதிகாரி, சேதுவை திட்டி வெளிய அனுப்பி விடுகிறார். சேதுவிற்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்து நிற்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சாவித்திரி, தாமரை இருவருமே தன் அண்ணனின் நிலை அறிந்து வீட்டிற்கு வந்து அழுது புலம்புகிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே தமிழுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். தமிழ் சொல்வதை யாரும் கேட்கவில்லை. தமிழ்செல்வி, யாரும் நம்பவில்லை என்றாலும் என் கணவர் என்னை நம்புவார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து சேது வீட்டிற்கு வருகிறார். கோபத்தில் சேது, ராஜாங்கம் போலீஸ் ஸ்டேஷனில் படும் கஷ்டத்தை எல்லாம் சொல்கிறார். அதைக் கேட்டு அப்பத்தா ரொம்பவே உடைந்து விடுகிறார். அப்போது சேது, இதற்கெல்லாம் காரணம் நீ மட்டும் தான். உன்னால்தான் இந்த பிரச்சனை என்று கோபத்தில் கொந்தளிக்கிறார். தமிழ் செல்வி அதிர்ச்சியில் நிற்கிறார்






