விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா மனம் இறங்காமல் போசை திட்டி விட்டார். அதற்குப்பின் மாப்பிள்ளை, மணமகள் இருவரையும் மேடைக்கு அழைத்தார்கள். தனம்- தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தனம், இந்த கல்யாணம் நடக்குமா? சேது மாமா உண்மையை கண்டுபிடிப்பாரா? என்றார். அதற்கு தமிழ், கண்டிப்பாக சேது உண்மையை கண்டுபிடிப்பார் என்றார். அதற்கு பின் அப்பத்தா, ஈஸ்வரியை அழைத்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மேடையில் எல்லோரும் முன்பும் தந்தார்.

ராஜாங்கம், தன்னுடைய உயிரை காப்பாற்றிய போஸுக்காக ஒரு கோடி ரூபாய் செக்கை எல்லோரும் முன்பும் மேடையில் கொடுத்தார். அந்த சமயம் வந்த சேது, பணத்தை கொடுக்காதீர்கள் என்றார். அப்போது தான் தமிழ்செல்விக்கு உயிரே வருகிறது. ஈஸ்வரி ரொம்பவே பதறினார். பின் சேது, உண்மையிலேயே மருந்து கொண்டு வந்தது போஸ் கிடையாது தமிழ்செல்வி தான். தமிழ்ச்செல்வி கஷ்டப்பட்டு உங்களுக்காக மருந்து கொண்டு வந்தார். தமிழ்செல்வியின் தலையில் அடித்து அவர் மயக்கம் போட்ட பின் போஸ் அந்த மருந்தை எடுத்து வந்தார் என்று நடந்ததை எல்லாம் சொன்னார்.
சின்ன மருமகள்:
உடனே ஈஸ்வரி கதறி அழுது ஒரு டிராமா செய்து, சேது எல்லாம் பொய் என்று சொல்லிவிட்டார். அதனால் ராஜாங்கத்திற்கு சேது சொல்வதில் நம்பிக்கையே இல்லை. பின் சேது, தான் அழைத்த வந்த ஆட்கள் மூலம் உண்மை சொன்னார். வைத்தியரின் மகள், நடந்ததை எல்லாம் சொன்னார். அதைக் கேட்டு ராஜாங்கம் ஷாக் ஆனார். ஈஸ்வரிக்கு கோபத்தில் நின்று கொண்டிருந்தார். போஸிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வைத்தியரின் மகள் எல்லா உண்மையும் சொல்லி விடுகிறார். ஈஸ்வரி, சூப்பராக இருக்க கதை. நீதான் சொல்லிக் கொடுத்தாயா? சேது என்றெல்லாம் பேசுகிறார். உடனே ராஜாங்கம், நீ கொண்டுவந்த ஆதாரம் பத்தவில்லை. வேறு ஏதாவது இருந்தால் சொல்லு சேது. அப்பதான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்று சொல்கிறார். உடனே சேது, தன் கையில் இருந்த விஷ வண்டுவை காண்பிக்கிறார். அதை பார்த்து எல்லோருமே பதறுகிறார்கள். சாவித்திரி தாமரை அங்கிருந்து ஓடுகிறார்கள். பின் சேது, அந்த வண்டை போஸ் மீது போட்டு விடுகிறார். அந்த வண்டு ஈஸ்வரியை கடித்து விடுகிறது.

சீரியல் ட்ராக்:
வலி தாங்க முடியாமல் ஈஸ்வரி- போஸ் இருவரும் கத்துகிறார்கள். அப்போது ஈஸ்வரி, உண்மையை சொல் போஸ் என்கிறார். போஸ், நான் தான் மருந்து கொண்டு வந்தேன் என்று மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார். வலி தாங்க முடியாமல் ஈஸ்வரி, சேது சொன்னது தான் உண்மை. போஸ் மருந்து கொண்டு வரவில்லை. தமிழ்செல்வி தான் கொண்டு வந்தார் என்று எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார். வலி தாங்க முடியாமல் போஸ் உண்மையை ஒத்துக் கொள்கிறார். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். சேது, உண்மையை கண்டுபிடிக்க தான் இப்படி செய்தேன். இனிமேல் எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் தான் எடுக்கணும் என்கிறார். ராஜாங்கம் கோபத்தில் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






