விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா, போஸ் இப்படி திருந்தாமல் இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் என்று திட்டி விட்டார். அதற்குப்பின் போஸுக்கு சரியான தண்டனை கொடுக்கணும் என்று காவியா, போஸ், ஈஸ்வரி, சித்ரா மூவரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு போனார். அங்கு போஸின் தலையில் தண்ணியை ஊற்றி பச்சை கலர் துணியை போட சொன்னார். போஸும் காவியா சொல்வது போல செய்தார் .பின் அங்கிருந்த சாமியார் கையில் வேல் இருக்கிறது. அதைப் பார்த்த போஸ், என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருந்தார்.

காவியா, போஸின் வாயில் வேலைக்கு குத்தி பரிகாரம் செய்ய சொன்னார். வேறு வழியில்லாமல் காவியா சொன்னதை போஸ் செய்தார். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கடுப்பானது. இருந்தாலும் சொத்து கையை விட்டு போக கூடாது என்று பொறுத்துக் கொண்டார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்விக்கு போன் செய்த வக்கீல், சேது விவாகரத்தை வாபஸ் வாங்க நினைக்கும் விஷயத்தை சொன்னார். அந்த சமயம் வந்த சேது, நான் வாபஸ் வாங்க முடிவெடுத்து விட்டேன். நீயும் கோர்ட்டில் வாபஸ் வாங்குவதற்கு சம்மதம் சொல் என்றார். ஆனால், தமிழ்செல்வி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
சின்ன மருமகள்:
அதற்குப்பின் மலர், தனம் இருவரும் கேசை வாபஸ் வாங்க சொல்லி கேட்டார்கள். ஆனால், தமிழ் எதுவுமே பேசாமல் மௌனம் காத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கோவிலில் பிச்சைக்காரன் ஒருவன், கோயிலுக்கு வருபவர்களிடம் ஏலனாகவும் நக்கலாகவும் பேசி இருந்தார். அதோடு முழுநேரம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதையே ஒரு வேலையாக வைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து ஈஸ்வரி, தாமரைக்கு இவரை கல்யாணம் பண்ணி வைத்து சாவித்திரியின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்குப்பின் அந்த பிச்சைக்காரனை அழைத்து ஈஸ்வரி, உனக்கு கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன் என்றார். இதைக்கேட்டு அந்த பிச்சைக்காரன் ஷாக்கானார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்-சேது இருவரும் கோர்ட்டுக்கு போக இருப்பதால் வீட்டில் எல்லோரும் சேர்ந்து விவாகரத்து வேண்டாம் என்று அறிவுரை எல்லாம் சொல்கிறார்கள். சேது, நான் விவாகரத்து முடிவில் மாறி விட்டேன். விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார். ஆனால், தமிழ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு சேது- தமிழ் இருவரும் கோர்ட்டுக்கு போகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அங்கு கோர்ட்டில் ஒவ்வொரு ஜோடிகள் விவாகரத்து கேட்டு பேசிக்கொண்டிருப்பதை தமிழ்-சேது பார்க்கிறார்கள். அதற்குப்பின் கோர்ட்டில் சேது, தான் செய்த தவறை மனப்பூர்வமாக உணர்ந்து தமிழிடம் மன்னிப்பு கேட்கிறார். பின் விவாகரத்து வேண்டாம் என்றும் சொல்கிறார். இதைக் கேட்டு தமிழ் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி இருவரும் கோயிலுக்கு போகிறார்கள். இதை அறிந்த ஈஸ்வரி, அந்த பிச்சைக்காரனை பணக்காரன் போல் வேஷம் போட்டு வர சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






