விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் நிறைய குடித்துவிட்டு காவியா ரூமிற்கு வந்து பிரச்சனை செய்து கொண்டிருந்தார். உடனே அங்கு வந்த ஈஸ்வரி, அமைதியாக இரு போஸ் என்றார். ஒரு கட்டத்தில் போஸ், இவ்வளவு நாள் நீ கண்டிஷன் போட்டாய். இனி நான் போடுகிறேன். நீ புடவை தான் கட்ட வேண்டும். வெளியே போகக்கூடாது. நான் சொல்லும் பேச்சை தான் கேட்க வேண்டும். இது என்னுடைய கேரக்டரே கிடையாது என்று எல்லா உண்மையும் சொன்னார். இதையெல்லாம் கேட்டு காவியாவிற்கு பயங்கர கோபம் வந்தது.

போஸ் குடித்துவிட்டு ஓவராக பேசியதால் காவியா, உங்கள் மகனை இங்கே தூங்கிக் கொள்ள சொல்லுங்கள். நான் என்ன செய்கிறேன் பார் என்று போஸ் குடித்து வைத்த சரக்கு பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே சேர் போட்டு உட்காருகிறார். இதை பார்த்து அப்பத்தாவிற்கு பயங்கர கோபம் வந்தது. வீட்டில் உள்ள எல்லோருமே வெளியே வந்து காவியா கையில் சரக்கு கிளாஸ்மாக இருப்பதை பார்த்து ஷாக் ஆனார்கள். பின் வீட்டில் எல்லோரும், என்னாச்சு? ஏன் இப்படி செய்கிறாய்? என்றெல்லாம் கேட்டார்கள். உடனே காவியா, போஸ் செய்ததை எல்லாம் சொன்னார்.
சின்ன மருமகள்:
பின் ஈஸ்வரி, போஸ்க்கு சப்போர்ட் செய்ததையும் சொன்னார். இதனால் கொந்தளித்த ராஜாங்கம், போசை திட்டி விட்டு காவியா சொல்வதை செய்து தான் ஆகணும் என்று அங்கிருந்து சென்றார். போஸ்-ஈஸ்வரி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்கள். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து ஜோசியர் சொன்னது போல தமிழ்-சேது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதை பற்றி பேசி இருந்தார். இதைக் கேட்டு சாவித்திரி- ஈஸ்வரி இருவருக்கும் கடுப்பானது. பின் தமிழ், ராஜாங்கம் சொன்னதால் திருமண நாளை கொண்டாடுவதற்கு ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, காவியா சொல்வதை கேட்டு நடந்து கொள் என்றெல்லாம் போஸுக்கு அறிவுரை சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, எப்படியாவது காவியாமிடம் இருந்து பணத்தை எல்லாம் வாங்க வேண்டும். அதற்காக பொறுத்துக் கொண்டு இரு என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். இதனால் போஸ் கோபத்தை குறைத்துக் கொள்கிறார். பின் காவியாவிடம் சென்று போஸ் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், காவியா நம்பவில்லை. இருந்தாலும் போசை திட்டி விட்டு வேலைக்கு கிளம்ப சொல்கிறார். இன்னொரு பக்கம் கருப்பன்- சேது இருவரும் ஊரில் 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். பின் சேது, தன்னுடைய மாமனார் மாமியாருக்கு போன் செய்து திருமண நாளை கொண்டாடும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் தாமரை- சாவித்திரி இருவரும் திருமணம் செய்து வைக்கும் ஜோடிகளுக்கு கொடுக்கும் சீர்வரிசை எல்லாம் பற்றி புலம்பி கொண்டிருக்கிறார்கள். அப்போது சாவித்திரி, நம்முடைய பக்கம் இரண்டு ஜோடிகளை தயார் செய்து அந்த பணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் திட்டம் போடுகிறார்கள். இதை காவியா கேட்டு விடுகிறார். இன்னொரு பக்கம் சேது, திருமண நாளிற்க்காக தமிழுக்கு பரிசு கொடுப்பதற்காக ரூமில் காத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி, உள்ளே வந்து விடுகிறார். பின் சேது, புது புடவை ஒன்று வாங்கி கொடுக்கிறார். அதை பார்த்து தமிழ்ச்செல்வி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார்.






