விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஷ், தாமரை- சாவித்திரியின் புகைப்படத்தை வைத்து பிச்சை எடுப்பதை ஒருவர் தாமரிடம் சொல்லி விட்டார். இதை அறிந்த தாமரை கோபத்தில் கொந்தளித்து காமேஷிடம் சண்டைக்கு போனார். பின் கோயில் என்று கூட பார்க்காமல் அந்த இடத்திலேயே தாமரை, காமேஷை புரட்டி எடுக்கிறார். இன்னொரு பக்கம் கிச்சனில் ராஜாங்கம், சேது, கருப்பு எல்லா ஆண்களுமே சமைத்துக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்து வீட்டில் உள்ள எல்லா பெண்களும் சந்தோஷப்பட்டார்கள்.

ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து சமைக்கிறோம் என்ற பெயரில் எல்லோருமே கிச்சனை துவம்சம் செய்து வைத்தார்கள். அதற்குப்பின் ஒரு வழியாக சமைத்த சாப்பாடுகளை எல்லா பெண்களுக்கும் அமர வைத்து பரிமாறுகிறார்கள். பெண்களுமே முதலில் சாப்பாடு நன்றாக இல்லாதது போல் நடிக்கிறார்கள். பின் எல்லோருமே சாப்பாடு அருமையாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். எல்லா ஆண்களும் ரொம்ப சந்தோசப்பட்டார்கள்.
சின்ன மருமகள்:
கிச்சன் இருக்கும் கோலத்தை பார்த்து அப்பத்தா பயங்கரமாக கத்தினார். வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே கிச்சன் அலங்கோலமாக இருப்பதை பார்த்து கோபப்பட்டார்கள். பின் அப்பத்தா திட்டியதால் சேது மற்ற ஆண்கள் எல்லோருமே கிச்சனை சரி செய்தார்கள். அதற்குப்பின் தமிழ்- சேது இருவரும் இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப் பின் தமிழ் செல்வி-சேது இருவரும் பிரக்னன்சி போட்டோ சூட்டை நடத்தினார்கள். விதவிதமாக உடை அணிந்து அழகாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதை ராஜாங்கம் குடும்பத்தினர் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது-தமிழ் இருவரும் நல்லபடியாக தங்களுடைய போட்டோ சூட்டிங் நடத்தி முடிக்கிறார்கள். அதற்குப்பின் சேது, உனக்கு வேறென்ன ஆசை என்று கேட்கிறார். அதற்கு தமிழ், எனக்கு இன்று திடீரென்று மாமாவின் சேரில் உட்கார வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்கிறார். சேது, நானே உட்கார்ந்ததில்லை. நீ எப்படி உட்கார முடியும். அமைதியாக இரு என்று கிளம்புகிறார். அதற்கு பின் தமிழை வெளியே அழைத்து வந்து ராஜாங்கத்தின் சேரில் உட்கார வைக்கிறார் சேது.

சீரியல் ட்ராக்:
வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், ஈஸ்வரி மட்டும் வயிறு எரிக்கிறார்.
அந்த சமயம் பார்த்து ராஜாங்கம் வந்து விடுகிறார். ஆரம்பத்தில் ராஜாங்கம் முறைக்கிறார். பின் சேது, தமிழின் ஆசையை சொன்னவுடன் ராஜாங்கமும் எல்லோருடன் சேர்ந்து தமிழை அமர வைத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார். அதற்குப்பின் சேது, தமிழிடம் அவருடைய ஆசையை கேட்டு கேட்டு செய்து கொண்டிருக்கிறார். அந்த சமயம் ஜெனி தங்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்வதை பற்றி தமிழிடம் சொல்லி புலம்பி அழுது கொண்டிருக்கிறார்.






