விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வியின் கல்லூரியில் தேர்வு முடிவுகள் வந்தது. அதில் தமிழ்செல்வி முதல் மதிப்பெண் எடுத்ததால் கல்லூரி ஆசிரியர் மட்டுமில்லாமல் எல்லோருமே பாராட்டுகிறார்கள். அதற்குப்பின் சேது, போஸுக்கு திருமணம் ஆவதை பற்றி தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்ட தனம், நீங்களும் உங்கள் தம்பியை போல என் அக்காவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டார்.

சேது, தனம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வந்து விட்டார். பின் தமிழ்ச்செல்வியுடன் பேசிய தன்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து பார்த்தார். அப்போது தமிழ்ச்செல்வி, என்னை விவாகரத்து கொடுத்து விட்டு வேறு ஒரு கல்யாணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டிருப்பார். அதற்கு சேது, தமிழை அடிக்க சென்று இந்த ஜென்மத்தில் மட்டுமில்லை ஏழெழு ஜென்மத்திலும் நீ தான் என் மனைவி என்றார். அதையெல்லாம் நினைத்து பார்த்து சேது வருத்தப்பட்டார்.
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் சாவித்திரி, தாமரை இருவருமே பிச்சைக்கார வேடத்தில் வீட்டு வேலை எல்லாம் செய்து
கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, போஸ் எல்லோருமே காரில் வந்து இறங்கி சாவித்திரியை வம்பு இழுத்தார்கள். கோபத்தில் சாவித்திரி, ஈஸ்வரி மீது கல்லை தூக்கிப் போடப் போனார். ஆனால், அதெல்லாம் கனவு. பின் எப்படியாவது இந்த திருமணம் நடக்கக்கூடாது என்று சாவித்திரி- தாமரை இருவரும் திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி- போஸ் இருவருமே இந்த கல்யாணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என்று யோசித்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ஈஸ்வரி, எப்படியாவது எம்எல்ஏ பொண்ணை நீ திருமணம் செய்து கொள். உன்னுடைய பெரியப்பா நம் குடும்பத்தை மதிக்கவே இல்லை. நம்மை ரொம்ப அவமானமாக நடத்துகிறார் என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக போஸை ஏற்றி விடுகிறார். அந்த சமயம் பார்த்து காவியா, போஸுக்கு போன் செய்து ஒரு இடத்தில் வந்து சந்திக்க சொல்கிறார். உடனே ஈஸ்வரி, நாலு பவுன் நகையை கொடுத்து ஒரு வைர மோதிரத்தை வாங்கிக் கொண்டு போய் குடு. அப்பதான் உன்னை ரொம்ப பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் மலர், போஸ்க்கு திருமணமாவது நினைத்து ரொம்ப எமோஷனாக பேசி அழுது கொண்டிருக்கிறார். அதற்கு தமிழ் செல்வி அவருக்கு ஆறுதல் சொல்லி தைரியப்படுத்துகிறார். அதற்குப்பின் தனம், உன்னை பற்றி மாமா ரொம்பவே கவலைப்படுகிறார் என்று சொல்கிறார். அதற்கு தமிழ், அதெல்லாம் சும்மா அவருமே வேறொரு திருமணம் செய்து கொள்வார் என்று சொல்கிறார். இதைக் கேட்டு கோபப்பட்ட சேது, சுவற்றில் இருக்கும் கொசுவை அடிப்பது போல தமிழை மிரட்டுகிறார். ஆனால், தமிழ் செல்வி எதுவும் சொல்லாமல் முறைத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






