விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது மட்டும் அசால்டாக உடைத்தார். உடனே தாமரை, பத்து கரும்பையும் சேர்த்து உடைக்கணும் என்று சொல்லிவிட்டார். முதலில் சேதுவால் உடைக்க முடியவில்லை. உடனே ராஜாங்கம், சேது உடன் சேர்ந்து அந்த கரும்பை உடைத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் கருப்பன், தன்னுடைய கையை உடைத்த தாமரைக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று தனத்துடன் சேர்ந்து திட்டம் போட்டார்.

கருப்பன், போட்டியில் தோற்றுவிட்டதாக சொல்லி தமிழ், காவியா, தனத்திடம் பணம் வாங்கினார். இதை கவனித்த தாமரை, என்ன பந்தயம் என்று கேட்டார். கருப்பன், நாங்கள் கொடுக்கும் கரும்பை தின்றுவிட்டு தண்ணீர் குடிக்கணும் என்றார். உடனே அந்த பந்தயத்திற்கு தாமரை, சித்ரா இருவரும் ஒத்து கொண்டு எல்லா கரும்பையும் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தார்கள். பின் எரிச்சல் தாங்க முடியாமல் இருவரும் கத்தினார்கள். அங்கிருந்து கருப்பன் எஸ்கேப் ஆகி விட்டார்.
சின்ன மருமகள்:
அதற்குப்பின் வெளிநாட்டில் இருந்து சிலர் பொங்கல் கொண்டாடுவதற்கு ராஜாங்கம் வீட்டிற்கு வந்து இருந்தார்கள். அவர்களை ராஜாங்கம் குடும்பத்தினர் அன்பாக வரவேற்று கவனித்தார்கள். பின் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ராஜாங்கம், கார்- தங்க காசுகளை பரிசாக கொடுத்தார். பின் இதை தமிழ்ச்செல்வி- சேது பெயரில் கொடுக்க சொன்னார். அதற்கு பின் வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நடன கலைஞர்களை வீட்டிற்கு வரவைத்து ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டம் என்று ராஜாங்கம் வீடு களைகட்டி இருக்கிறது. அப்போது கருப்பன், தமிழ் மனதில் காதல் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வதற்கு நீ அவர்களுடன் சேர்ந்து நடனமாடு. தமிழ் கோபப்பட்டால் அவர் உன்னை காதலிக்கிறார் என்று அர்த்தம் என்று சொல்கிறார். பின் சேதுவின் அண்ணன் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததால் சேது பயங்கரமாக அந்த நடன கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடுகிறார். இதை பார்த்து தமிழ் கோபப்பட்டு உள்ளே சென்று விடுகிறார். இதை பார்த்து சேதுவிற்கு சந்தோஷமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:
பின் சேது, உன் மனதில் காதல் இருப்பது எனக்கு தெரிந்து விட்டது என்றெல்லாம் போதையில் உளறுகிறார். இதை அறிந்த தமிழ்செல்வி, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் குடித்துவிட்டு ஆடுவது எனக்கு என்ன புதிதா? நீங்கள் என்ன வேணாலும் செய்து கொள்ளுங்கள். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை என்று சென்று விடுகிறார். அதற்குப்பின் மலைவாழ் கிராமத்தில் இருந்து சில பேர் ராஜாங்கம் வீட்டிற்கு வந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறார்கள். அப்போது ஈஸ்வரி, அந்த சாமியாடி பெண்ணை பார்த்து உங்களிடம் கேள்வி கேட்கணும் என்று சொல்கிறார்.






