விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் பயங்கரமாக கோவப்பட்டார். ஒரு கட்டத்தில் தாமஸ், எங்க வீட்டு பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஜெனி, சக்தி இருவரையும் அழைத்து சென்று விட்டார். வீட்டில் எல்லோருமே தமிழை தான் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். தமிழ், தன் தரப்பு நியாயத்தை எவ்வளவு எடுத்து சொல்லியுமே யாரும் கேட்கவில்லை. அப்போது டிவியில் தமிழ்ச்செல்வி செய்த வேலையால் இருதரப்பு ஜாதியினருக்கும் கலவரம் வெடிப்பதாக நியூஸ் வருகிறது. இதனால் ராஜாங்கம் ஷாக் ஆனார்.

நியூஸில், ராஜாங்கத்தையும் அவர் கட்சியையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதோடு இந்த ஜாதி கலவரத்தால் இரண்டு பேர் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருப்பதாக சொன்னார்கள். ராஜாங்கத்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஈஸ்வரி வழக்கம் போல கொளுத்தி போட்டுக் கொண்டிருந்தார். பின் கட்சியின் தலைவி, ராஜாங்கத்திற்கு போன் செய்து திட்டிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து சேதுவிற்கு பயங்கர கோபம் வருகிறது. தமிழை திட்டிக் கொண்டிருந்தார்.
சின்ன மருமகள்:
தமிழ், நான் எதுவும் செய்யவில்லை என்று எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், சேது நம்பவே இல்லை. அதற்குப்பின் ஜெனியின் அப்பா தாமஸ், உங்களால் என்னை கட்சியில் இருந்து விலக்கி விட்டார்கள். எனக்கான போஸ்டிங்கும் கொடுக்கவில்லை என்றார். ராஜாங்கம் தன்னுடைய கட்சியில் சேர்த்துக் கொள்வதாக அறிவித்து விட்டார். அதற்குப் பின் தாமஸ், தன்னுடைய அடியாட்களை வைத்து சக்தியை அடித்து இழுத்து சென்றார். ஜெனி எவ்வளவோ கெஞ்சி கேட்கிறார். ஆனால், தாமஸ் கேட்கவில்லை. ஜெனி, தமிழிடம் நடந்ததை சொல்ல போன் செய்தார். அதற்குள் ஜெனி அம்மா போனை பிடுங்கி விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தாமஸ், ராஜாங்கத்தை தன் வலையில் சிக்க வைப்பதற்கு வரவேற்கிறார். தாமஸ், நல்லவன் போலவே தாமஸ் பேசிவிட்டு சரக்கு அடிக்கலாம் என்றெல்லாம் கேட்கிறார். ராஜாங்கம் கோபத்தில் ராஜாங்கத்தை திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்கு பின் அதே இடத்திற்கு சக்தியை கட்டிப்போட்ட நிலையில் தாமஸ் அடியாட்கள் வைத்திருக்கிறார்கள். தாமஸ், சக்தியின் கதையை முடித்து விட சொல்கிறார். சக்தியை அடியாட்கள் அருவாளால் வெட்டி கொன்று விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சேது தன் அப்பாவின் நிலமையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதன்பின் ஈஸ்வரி, ராஜாங்கத்திற்கு எதிரியிடம் போன் செய்து அவரை பழிவாங்க எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் ராஜாங்கத்தை விருது விழாவிற்கு வர சொல்கிறார்கள். ராஜாங்கம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. கட்டாயப்படுத்தினால் ராஜாங்கம் ஒத்துக் கொள்கிறார் பின் டிவி, நியூஸ் சேனல் என அனைத்திலும் சக்தி கொலை செய்யப்பட்டு இருக்கும் செய்தி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.






