‘முகத்தை வரைந்து தருமாறு கேட்ட வரைந்து தருவேன்’ – சின்னத்தம்பி படத்தில் வந்த இவரை நினைவிருக்கிறது ? அவருக்கு இப்படி ஒரு திறமையா ?

0
773
marthandam
- Advertisement -

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் சின்ன தம்பி. இந்த படத்தில் பிரபு, குஷ்பு, கவுண்டமணி, மனோரமா, ராதாரவி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ஓராண்டை கடந்து வெற்றி படமாக கொண்டாடப்பட்டு இருந்தது. மேலும், இந்த படத்தில் விதவையாக நடித்த நடிகை மனோரமாவுக்கு தாலி கட்டச் சொல்லும் கதாபாத்திரத்தில் ‘எனக்கு கல்யாணம்.. எனக்கு கல்யாணம்..’ என அப்பாவித்தனமாக நடித்திருந்தவர் சின்னத்தம்பி மார்த்தாண்டன். இவரைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

இந்நிலையில் இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் குறித்து கூறியிருப்பது, நான் ஒரு ஓவியர். எனக்கு சினிமாவின் மீது ஆசை ஏற்படுவதற்கு காரணமே ஓவியம் தான். அதனால் நான் பார்த்திருந்த ஓவிய ஆசிரியர் பணியை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்தேன். அதுமட்டுமில்லாமல் நான் சினிமாவில் பிரபல நடிகராக முடியாமல் போனதற்கும் என்னுடைய ஓவியம் தான் காரணம். நான் பிறந்தது நாங்குநேரி அருகே ஏறாந்தை என்ற குக்கிராமம். என்னுடைய இயற்பெயர் முருக மார்த்தாண்டன். நாங்கள் விவசாய குடும்பம். அப்பா பனை ஓலையில் கிளி, குருவி செய்வார். அது தான் என்னை ஓவியனாக மாற்றியது.

- Advertisement -

மார்த்தாண்டன் அளித்த பேட்டி:

பின் நான் ஓவிய ஆசிரியர் பயிற்சி பெற்று திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்தேன். மேலும், திருவிழா நாடகங்களில் நகைச்சுவை,ஹீரோ கதாபாத்திரங்களில் நடிப்பேன். அதை பார்த்த நண்பர்கள் உனக்கு சினிமாவில் நடிக்க தேவையான அத்தனை திறமையும் இருக்கிறது என்று கூறுவார்கள். ஆனால், என் பெற்றோருக்கு நான் ஆசிரியர் ஆக பணி புரிய வேண்டும் என்பதுதான் விருப்பம். இருந்தாலும் எனக்கு சினிமாவின் மீது ஏற்பட்ட ஆசையால் 1978 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

சினிமா பயணம் குறித்து கூறியது:

பிரபல ஓவியர் உபால்டு, ஈஸ்வர் ஆகியோருடன் சேர்ந்து சினிமா போஸ்டர்கள், நடிகர்- நடிகைகள் படங்களை ஓவியமாக வரைந்தேன். மேலும், மும்பையில் பிரபல ஓவியர் மோகனிடம் சினிமா போஸ்டர் தயாரிப்பு நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். அது மட்டுமில்லாமல் சினிமா வாய்ப்புகளையும் தேடி அலைந்தேன். நடிகர் விவேக், சார்லி, தாமு போன்றவர்களும் என்னுடன் சேர்ந்து வாய்ப்பு தேடி இருந்தார்கள். பின் இயக்குனர் ராஜசேகர் மூலம் கழுகு மலைக்கள்ளன் படத்தில் அம்மாவாசை என்ற கதாபாத்திரம் எனக்கு கொடுத்தார். என் ஓவியத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் ஒரு வீடு இரு வாசல் படத்தில் எதைப் பார்த்தாலும் கரித்துண்டால் ஓவியம் வரையும் கேரக்டர் கொடுத்தார்.

-விளம்பரம்-

மார்த்தாண்டன் திரைப்பயணம்:

அதுதான் என்னை சினிமாவில் அடையாளப்படுத்தியது. பின் நடிகர் பிரபு சின்னத்தம்பியில் நடிக்க பரிந்துரை செய்தார். அதன் பின்பு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது. நான் இதுவரை 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு சினிமா, ஓவியம் இரண்டும் இரு கண்களாக இருந்தது. ஓவியத்தை விட முடியாததால் சினிமாவின் மீது தேடல் குறைவானது. இதனால் வாய்ப்புகள் குறைந்தன. என்னை சினிமாவில் நடிக்க வைத்ததும் ஓவியம் தான். நான் பிரபலமாக முடியாததற்கு காரணம் ஓவியம் தான். சினிமாவில் 75 சதவீதம் பேர் நல்லவர்கள் உள்ளனர். அவரை அடையாளம் காண்பது தான் கடினம். ரஜினி, கமல், பாலசந்தர் போன்ற பல பிரபலங்களுக்கு ஓவியம் வரைந்து அவர்களிடம் கொடுத்து இருக்கிறேன்.

மார்த்தாண்டன் செய்யும் வேலை:

கடைசியாக நான் தனுஷ் நடித்த பரட்டை படத்தில் நடித்தேன். இனி எனக்கான கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஓவியம் வரைவது குறித்த சிறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். சினிமா ஆசை எந்த காலத்திலும் அழியாது. இளைஞர்கள் சினிமாவை தெரிந்து வாய்ப்பு தேடுவது அவசியம். ஆண்களை விட பெண்கள் மிகவும் சிரமப் படுவார்கள். அதனால் எச்சரிக்கையுடன் சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைவது நல்லது. சினிமா என்னை மக்களிடம் சேர்த்தது,ஓவியம் எனக்கு பொருளாதாரத்தை கொடுத்தது என்று பல விஷயங்களை கூறி இருந்தார்.

Advertisement