கவுண்டமணி முதல் பாகியராஜ் வரை பல படங்களில் நடித்த இந்த நடிகை யார் தெரியுமா ? அவர் அப்பா எம்.ஜி.ஆர் படத்துல எல்லாம் வந்தவர்.

0
1022
babitha
- Advertisement -

தற்போது சினிமா உலகில் இருக்கின்ற இயக்குனர்கள் சிலர் திரைப்படம் மட்டும் இயக்குவது கிடையாது. அவர்கள் படங்களில் நடிக்கவும் தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் பாக்கியராஜ் ஒருவர். தமிழ் சினிமாவில் நடிப்பதும் திரைப்ப டங்களை இயக்குவது போன்ற இரண்டு துறைகளிலும் வல்லமை பெற்றவர் தான் பாக்யராஜ். இவர் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும்
ஹிந்தியிலும் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். மேலும், 80களில் பெரும்பாலும் பேசப்பட்ட நடிகராக திகழ்ந்தவர் தான் பாக்யராஜ். இவர் சின்ன வீடு என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை பபிதா.

-விளம்பரம்-

பபிதாவின் சினிமா கனவு :-

இவர் நடிகர் எம்.ஜி.ஆருடன் சண்டை காட்சியில், திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகர் ஜஸ்டின் . இவருடைய மகள் தான் நடிகை பபிதா. நான் 14 வயதில் நடிக்கவந்தேன். நான் படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் அப்பாவிடம் கேட்டேன். அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதற்காக அம்மாவும் நானும் ஆறு மாதம் வீட்டில் பயங்கரமாகசண்டை போட்டு போராடினோம். அப்பா நான் உனக்கு பணம் தரமாட்டேன். என்னுடைய பெயரை எந்த இடத்திலும் நீ பயன்படுத்தக் கூடாது, நீயே சினிமாவில் சாதித்துக்கொள் என்று கூறினார்.

- Advertisement -

அப்பாவுடன் சவாலுக்கு தயாரான பபிதா :-

இதை நானும் எனது அம்மாவும் ஒரு சேலஞ்சாக எடுத்துக் கொண்டோம் பிறகு வீட்டிற்கு செலவு செய்யும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சப்படுத்தி சேர்த்து வைத்து எனக்கு டிரஸ் மேக்கப் என அனைத்தும் செய்தோம். அப்படி இருக்கையில் இயக்குனர் ஸ்ரீதர் அவரின் படத்திற்கு ஹீரோயின் செலக்சன்காக சென்று இருந்தோம். அப்போது ஸ்ரீதர் ஐயோ சாரிம்மா ஷூட்டிங் ஆரம்பித்து பத்து நாட்கள் ஆகிவிட்டனர் முன்பாக நீங்கள் வந்து இருக்கலாம் என கூறினார்.

கொலை பசியில் இருப்பவனுக்கு பழையசோறும் அமிர்தம்தான் :-

தாமதமாக வந்ததை நினைத்து சோகமுடன் கிளம்பினோம். நாங்கள் கிளம்பும் சமயத்தில் எங்களை கூப்பிட்டு இந்த படத்தில் ஒரு சாங் இருக்கிறது அதன்பின் இரண்டு மூன்று காட்சிகள் இருக்கிறது. வேண்டுமென்றால் இன்னும் இரண்டு மூன்று சீன்கள் வைக்கிறேன் நடிக்கிறிங்களா என்று கேட்டார். எனக்கு பல நாட்கள் சாப்பிடாமல் இருப்பவனிடம் கஞ்சி கொடுத்தால் இப்படி இருக்கும் அதே மனநிலையை நான் எனக்கு இருந்தது. மிகவும் சந்தோச பட்டேன் அப்படித்தான் எனது சினிமா வாழ்க்கை ஆரம்பித்தது

-விளம்பரம்-

கனவு நிறைவேறியது :-

இவர் 1980களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்துள்ளார். பின்னர், சின்ன வீடு என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் என்று திரைப்படத்தில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார். மேலும், கவர்ச்சி கன்னி, கவர்ச்சி புயல் என்று அழை க்கப்ப டும் நடிகை ஷகிலாவுக்கு போட்டி யாக கவர்ச்சியை காட்டிவந்துள்ளார். அதன் பிறகு பூவே பூச்சூட வா, மங்கை ஒரு கங்கை அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடி த்தேன்.

அரசியலில் குதித்தேன் :-

பின் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை பபிதா சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.
பிறகு அரசியல் பக்கம் சென்று விட்டார். இதற்கிடையில் மகளை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்தில் நடிகை ஷகிலாவுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருந்தார். இவருடைய தந்தை எம்.ஜி.ஆர் நெருங்கிய நண்பர் என்பதனால் அதிமுக கட்சியில் வலம் வந்தார் என சமீபத்தில் பேட்டி அளித்த நடிகை பபிதா மனம் திறத்து பேசினார்.

Advertisement