சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் 2022 – யார் யார் எந்தெந்த அணி தெரியுமா ? இவங்க எல்லாம் இருக்காங்களா ?

0
1704
serials
- Advertisement -

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக பல ஆண்டு காலமாக தொலைக்காட்சித் தொடர்கள் விளங்கி வருகிறது. அதிலும் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் தங்களுக்கு என ஒரு இடம் பிடித்திருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் சின்னத்திரை நடிகர்களுக்கான சங்கம் ஒன்று உள்ளது.

-விளம்பரம்-

அந்த சங்கத்திற்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் 2001ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. இந்த தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது தான் வழக்கம். கடந்த 2019ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் நடிகர் ரவி வர்மா தலைமையிலான அணி வெற்றி பெற்றது. மேலும், பதவியேற்ற சில மாதங்களிலேயே பலவித பிரச்சனைகளால் இந்த சங்கம் செயல்படாமல் நின்று போனது. அதோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கம் பிரிந்ததால் பொதுக்கூட்டங்கள், திட்டங்கள் என பல குழப்பத்திலேயே சின்னத்திரை நடிகர் சங்கம் நடந்து முடிந்தது.

- Advertisement -

சின்னத்திரை நடிகர்கள் சங்க தேர்தல் :

இதனால் மீண்டும் இந்த சங்கத்திற்கான தேர்தல் வைக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி சின்னத்திரை நடிகர் சங்கம் தேர்தல் தொடங்க உள்ளது. இந்த முறை தேர்தலில் 3 அணிகள் போட்டியிடுகின்றன. முன்னாள் தலைவரான ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையில் ‘வசந்தம் அணி’ என்ற பெயரில் ஒரு அணியும், நடிகர் ரவி வர்மா தலைமையில் ‘உழைக்கும் கரங்கள்’ என்ற பெயரில் ஒரு அணியும், ‘புதிய வசந்தம்’ என்ற பெயரில் நடிகர் ஆதித்யா என்.எஸ்.செல்வம் தலைமையில் ஒரு அணியும் போட்டி இட இருக்கிறார்கள். ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாக கமிட்டி தான் சின்னத்திரை நடிகர் சங்கம். தற்போது இந்த மூன்று அணிகளும் இந்த பதவிகளுக்கு தான் போட்டியிடுகின்றனர்.

வசந்தம் அணி:

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு ஜனவரி 9-ம் தேதி தேர்தல்..! - touringtalkies

நடிகர் ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையிலான வசந்தம் அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார்.
செயலாளர் பதவிக்கு- போஸ் வெங்கட் போட்டியிடுகின்றனர்.
பொருளாளர் பதவிக்கு- நடிகர் விஜய் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.
துணைத் தலைவர்கள் பதவிக்கு- சோனியா போஸூம், பரத்தும் போட்டியிடுகின்றனர்.
இணைச் செயலாளர்கள் பதவிக்கு -சதீஷ், சிவகவிதா, எம்.துரை மணி, சவால் ராம் ஆகிய நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு- சாந்தி வில்லியம்ஸ், பிர்லா, தேவ் ஆனந்த், ஈஸ்வர் ரகுநாதன், ஜி.பவித்ரன், ஸ்ரீவித்யா சங்கர், தீபா, குகன், சிவராமன், ராஜேஷ் கண்ணா, ஆனந்த், நேத்ராஸ்ரீ, ஸ்ரீகவி பரணி, பரமசிவம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

-விளம்பரம்-

உழைக்கும் கரங்கள்:

தலைவர் பதவிக்கு– ரவி வர்மா போட்டியிடுகிறார்.
செயலாளர் பதவிக்கு–எம்.டி.மோகன்
பொருளாளர் பதவிக்கு–வைரவராஜ்.
துணைத் தலைவர்கள் பதவிக்கு– ராஜ்காந்த், சி.என்.ரவிசங்கர் இருவரும் போட்டியிடுகின்றனர்.
துணைச் செயலாளர்கள் பதவிக்கு– தேவி கிருபா, தீபா, ஜி.தினேஷ், சி.சரத் சந்திரா ஆகிய நால்வரும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு– பி.எல்.அழகப்பன், அரவிந்த் கத்தாரே, பாலாம்பிகா, பி.பாலசுப்ரமணியன், ஏ.கோமதி, ஏ.ஜவஹர் கார்த்திகேயன், கே.கமல்ஹாசன், கே.பி.கற்பகம், சி.மணிகண்டன், ஆர்.முருகன், பாண்டி டி.செல்வம், ஜெ.ரஞ்ஞன், செந்தில்நாதன், டி.சிவக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

புதிய வசந்தம் அணி:

தலைவர் பதவிக்கு– ஆதித்யா என்.எஸ்.செல்வம் போட்டியிடுகிறார்.
செயலாளர் பதவிக்கு– அசோக் சாமுவேல்
பொருளாளர் பதவிக்கு– வி.நவீந்தரும்.
துணைத் தலைவர்கள் பதவிக்கு– பி.ஜெயலட்சுமியும், சிந்து என்ற கெளரியும் போட்டியிடுகின்றனர்.
இணைச் செயலாளர்கள் பதவிக்கு– எஸ்.நயினார் முகம்மது, ஷ்ரவன், நீபா, ரம்யா சங்கரும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு- பாக்கியலஷ்மி, கோபி, சி.வி.கிருஷ்ணா, ஜெ.லட்சுமி, ரஜினி நிவேதிதா, எஸ்.ரமா, S.ரஞ்சித்பாபு, சாய்கோபி, வி.சிவக்குமார், என்.சுதாகர், ஸ்ரீத்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

எந்த அணிக்கு வெற்றி :

மேலும், சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஜனவரி 9ஆம் தேதி விருகம்பாக்கத்தில் இருக்கும் ஏகேஆர் மகாலில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அது மட்டும் இல்லாமல் அன்று மாலையிலேயே வாக்கு எண்ணிக்கைகள் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஜனவரி 9ஆம் தேதி தேர்தலில் எந்த அணி அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement