பெண் குழந்தை வேண்டாம், வீடே ஹாஸ்டல் மாதிரி இருக்கு – சிரஞ்சீவியின் சர்ச்சை பேச்சால் குவியும் கண்டனங்கள்

0
158
- Advertisement -

பெண்கள் குறித்து நடிகர் சிரஞ்சீவி பேசி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிரஞ்சீவி. ‘மெகா ஸ்டார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த பட்டங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் தெலுங்கில் நடிகராக அறிமுகமான முதல் படம் ‘பிராணம் கரீடு’. இந்த படத்தை இயக்குநர் கே.வாசு இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். இவருக்கு என்று உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடைசியாக சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியிருந்த படம் போலோ சங்கர். இந்த படம் அஜித்தின் வேதாளம் படத்தின் ரீ- மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிரஞ்சீவி குறித்த தகவல்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் விஸ்வம்பர என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது தன்னுடைய படங்களில் சிரஞ்சீவி அதிக கவனம் செலுத்துகிறார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மானந்தம் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் சிரஞ்சீவி கலந்து கொண்டிருந்தார். அப்போது தொகுப்பாளினி, ராம் சரணின் மகள் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்.

சிரஞ்சீவி சர்ச்சை கருத்து:

அதற்கு சிரஞ்சீவி, வீட்டில் என்னை சுற்றி பெண்களை தான் இருக்கிறார்கள். நான் வீட்டில் பேத்திகளுடன் இருப்பது போல் இருக்காது. பெண்கள் விடுதியில் இருக்கும் வார்டனை போல தான் இருக்கும். என்னை சுற்றி லேடீஸ் மட்டும் தான் இருப்பார்கள். அதனால் தான் ராம்சரணிடம் இந்த முறையாவது ஒரு ஆண் குழந்தையை பெற்று கொடு என்று கேட்டிருக்கிறேன். நம்முடைய பரம்பரை வளர வேண்டும், அதற்கான வழி செய் என்றும் கேட்டிருக்கிறேன்.

-விளம்பரம்-

குவியும் கண்டனம்:

ராம்சரணுக்கு மகள் மேல் பாசம் அதிகம். அதனால் அவர் மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுப்பாரோ? என்று பயமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இப்படி சிரஞ்சீவி ஆண் குழந்தைகளை உயர்த்தியும், பெண் குழந்தைகளை தாழ்த்தியும் பேசி இருப்பது தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளம்பி இருக்கிறது. இதற்கு பலருமே கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில் நடிகர் சிரஞ்சீவி அவர்கள் 1980 ஆம் ஆண்டு தெலுங்கு நகைச்சுவை நடிகர் அல்லு ராமலிங்கையாவின் மகள் சுரேகாவை திருமணம் செய்திருந்தார்.

சிரஞ்சீவி குடும்பம்:

இவர்களுக்கு ராம்சரண் என்ற மகனும், சுஷ்மிதா, ஸ்ரீஜா என்ற மகள்களும் இருக்கிறார்கள். ராம்சரண் தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பது அனைவரும் அறிந்ததே. இவர் உபசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதேபோல் சிரஞ்சீவியின் மகள்களான சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருக்கும் தலா இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

Advertisement