திருமண வீடியோ முன் நடந்த மகனின் பெயர் சூட்டு விழா – மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மகன் பெயர் இதான்.

0
2085
megna
- Advertisement -

நடிகை மேக்னா ராஜ் அவர்கள் சினிமா உலகில் சில படங்களில் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார். இவர் சினிமா உலகில் பிரபலமான சுந்தர்ராஜ் –பிரமிளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,. மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும் நடிகை மேக்னா ராஜ் அவர்கள் கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த வருடம் ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்தார். இவரின் இழப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர். மேலும், அவர் இறந்தபோது மேக்னாராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அதுமட்டும் இல்லாமல் சிரஞ்சீவி சார்ஜா மறைவையடுத்து மேக்னாராஜ் பல உருக்கமான பதிவுகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார்.

இதையும் பாருங்க : அப்பா அம்மா சிரிக்கிறத பாக்குறதே பெரிய சந்தோசம் – தன் தந்தை பிறந்தநாளில் புகழ் போட்ட பதிவு.

- Advertisement -

அதில் அவர் ‘நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அது நம் குழந்தை’ என்று கூறியிருந்தார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த அழகான குழந்தையை செல்லமாக சீண்டு என அழைத்து வந்தார். மேலும், குழந்தைக்கு பெயர் சூட்டு விழா விரைவில் நடைபெறும் என்று அவர் குடும்பத்தினர் கூறி வந்திருந்தார்.

இந்த நிலையில் மேக்னா ராஜ் தன் குழந்தைக்கு ‘ராயன் ராஜ் சார்ஜா’ என பெயர் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக மேக்னா ராஜ் தன் இன்ஸ்டாகிராமில் ஸ்பெஷல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேக்னாராஜ் அதில் தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட காட்சியையும், குழந்தையின் வீடியோவும் இணைத்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement