விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வந்த கோமாளிகள் தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது.
குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளி இருந்தார் புகழ். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னரே இவர் KPY சிரிச்சா போச்சு போன்ற பல நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பல்வேரு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்த வண்ணம் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் புகழின் அப்பா இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்க்கு வாழ்த்து தெரிவித்து தன் அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் புகைபடத்தை பகிர்ந்துள்ள புகழ், கடவுள் கண்ணுல காட்டுன கடவுள் என் அப்பா. அப்பா அம்மா சிரிக்கிறத பாக்குறதே பெரிய சந்தோசம். இனி எப்பவுமே சிரிச்சிட்டே இருக்கணும் என்று பதிவிட்டுள்ளார்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.