தற்போது இருக்கும் கால கட்டத்தில் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் இளசுகள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் அதி விரைவில் உருவாகிவிடுகின்றனர். அதே போல சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகைகள் சென்றுள்ளனர். வாணி போஜன், பிரியா பவானி சங்கர் என்று பலரும் சின்னத்திரையில் இருந்து சென்றவர்கள் தான். அந்த வகையில் சித்தி 2 சீரியலில் நடித்து வரும் ப்ரீத்தி சர்மாமாவும் மிகவும் குறிகிய காலத்திலேயே இளசுகள் மனத்தில் இடம்பிடித்தவர் தான்.
தென்னிந்திய சினிமா திரை உலகில் 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சித்தி, அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். ஆனால், ராதிகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது சித்தி சீரியல் தான். 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இல்லத்தரசிகள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டு பார்க்க வைத்த சீரியல் சித்தி.
இதையும் பாருங்க : 15 லட்சம் நீங்கள் விரும்பினால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்- சொல்றது ஒன்னு செய்றது ஒன்னு. மருத்துவர்களுக்கு இழப்பீடு அறிவித்த ஸ்டாலினை விமர்சித்த காயத்ரி.
தற்போது 22 வருடங்களுக்கு பிறகு “சித்தி 2” சீரியல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டு உள்ளது. இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.இந்த சீரியல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலம் இவர் பிரபலமடைந்தது விட வெண்பா டிக்டாக்கில் செய்த வீடியோ மூலம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.இவர் சித்தி 2 சீரியலுக்கு முன்பாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம் ‘ தொடரில் கதாநாயகி ஜனனியின் தங்கையாக நடித்து பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா