15 லட்சம் நீங்கள் விரும்பினால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்- சொல்றது ஒன்னு செய்றது ஒன்னு. மருத்துவர்களுக்கு இழப்பீடு அறிவித்த ஸ்டாலினை விமர்சித்த காயத்ரி.

0
919
stalin
- Advertisement -

தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி மு க அமோக வெற்றிபெற்றதன் மூலம் முதன் முறையாக தமிழக முதலமைச்சரானார் தி மு க கட்சி மு க ஸ்டாலின். அவர் முதலமைச்சராக பணியேற்றவுடன் தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். கொரோனா நிவாரண நிதியாக 4000 வழங்கப்படும் என்று அறிவித்து இருந்த ஸ்டாலின் முதலமைச்சரான பின்னர் அதன் முதன் தவணையாக 2000 ரூபாய் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் அளிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதே போல ஆவின் பால் விலை குறைப்பு, மகளீருக்கு கட்டணமில்லா பேருந்து என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இப்படி ஒரு நிலையில்நேற்று செவிலியர் தினத்தை முன்னிட்டு கொரோனா சமயத்தில் அயராது உழைத்துகொண்டு இருக்கும் டாக்டர்களுக்கும் ரூ.30,000, செவிலியர்களுக்கும் ரூ. 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துஇருந்தார்.

இதையும் பாருங்க : கிரிஷ் – சங்கீதா ஜோடியின் மகளா இது ? ப்பா, எப்படி வளர்ந்துட்டார் பாருங்க. லேட்டஸ்ட் புகைப்படம்.

- Advertisement -

இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், அல்லும் பகலும் நமது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவரும்  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி. ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்திப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மற்றும் அச்சிகிச்சை சார்ந்த பணிகளில் ஈடுபட்ட மேற்கூறிய அலுவலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக் காலமான, ஏப்ரல், மே, ஜூன் -மூன்று மாத காலத்திற்கு, மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதரப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும்பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : செவிலியர் தினத்தில் தான் செயிலியராக இருந்த போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட ஜூலி (அட, உண்மையிலேயே நர்ஸ் தான் போல)

-விளம்பரம்-

ஸ்டாலினின் இந்த அறிக்கையை பல்வேரு மருத்துவர்களும் செவிலியர்களும் வரவேற்று ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகையும்  தமிழக பா.ஜ., கலைப்பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம் விமர்சித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முன் பணியாளர்கள் உயிர் இழந்தால் 1 கோடியை நிவாரணம் ஸ்டாலின் கோரினார். மோடி ஜீ மற்றும் EPS 50 லட்சம் கொடுத்தார்கள்.. அதை ஸ்டாலின் இப்பொழுது 25 லட்சமாக குறைத்து விட்டார். அன்று கேட்டது ஒன்று இன்று செய்வது ஒன்று.

15 லட்சம் நீங்கள் விரும்பினால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள், மோடி ஜீ சொன்னதைப் புரிந்து கொள்ளுங்கள். அல்லது நீங்கள் ஸ்டாலின் தலைவர் பிட் பேப்பர் இந்தியைக் கேட்டால், நீங்கள் தவறான செய்திகளை மட்டுமே பெறுவீர்கள். பத்திரிகை மற்றும் ஊடகங்களை முன் பணியாளர்கள் அவர் கருதுவதால், பத்திரிகை மற்றும் ஊடக குடும்பங்களின் இழப்புக்கு கூட அவர் 1 கோடி ஈடுசெய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement