தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். பாலா சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். தற்போது இவர் வணங்கான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் எல்லாம் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீடு விழாவும், பாலாவினுடைய திரைப்பயணம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ‘பாலா 25’ விழாவும் சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் வணங்கான் படக்குழுவுடன் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஷ்கின், சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இதில் சூர்யா ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.
சித்ரா லட்சுமணன் பேட்டி:
இந்த நிலையில் வணங்கான் விழாவில் சூர்யா கலந்து கொண்டது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் கூறியிருப்பது, வணங்கான் பட விழாவில் சூர்யா கலந்துகொள்ள வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று நான் ஏற்கனவே சொல்லிருந்தேன். அதே மாதிரி தான் சூர்யா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார். இன்னும் சொல்லப்போனால், அது வணங்கான் பட விழா மட்டுமில்லாமல் பாலாவிற்குமான ஒரு விழாவாக அமைந்திருந்தது.

சூர்யா பற்றி சொன்னது:
ஒரு வேளை சூர்யா கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் அந்த விழா நிறைவு பெற்று இருக்காது.
பாலா உடன் பணியாற்றிய அனுபவங்களை குறித்து சூர்யா பகிர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
எவ்வளவு நாட்கள் தான் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்ல முடியும். அனைத்திற்கும் ஒரு முடிவு வேண்டாமா, அதுதான் அந்த நிகழ்ச்சியில் நடந்தது. அதற்கான முயற்சியை எடுத்த சூர்யாவை பாராட்டியே ஆக வேண்டும்.

வணங்கான் குறித்த தகவல்:
சூர்யா உடன் ஒரு படம் ஆரம்பித்த பாலா சார் ரொம்ப நல்லா சூட் போயிட்டு இருந்தார். ஒரு நாள், இரண்டு நாள் இல்லை. கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் செலவு செய்திருந்தார். ஒரு கட்டத்தில் சூர்யாவும் பாலாவும் பிரிகிற நேரம் வந்தது. அதே படத்தை இன்னொரு ப்ரொடியூசர் உடன், இன்னொரு நாயகரை வைத்து
பாலா சார் எடுத்தார். ஆனால், சூர்யா அந்த படத்தைப் பற்றிய கவலைப்படவே இல்லை. அது மிகப் பெரிய விஷயம். தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கூட அவர் கண்டு கொள்ளவில்லை.

சூர்யா செய்த தியாகம்:
சூர்யாவுடைய அந்த மனசை பாராட்டி தான் ஆக வேண்டும். எனக்கு எல்லாம் இப்படி எந்த ஒரு ப்ரொடியூசரும் விட்டுக் கொடுக்க கூட இல்லை. சினிமாவில் இது ரொம்பவே குறைவாக இருக்கிறது. அதோடு நிகழ்ச்சியில் என்னுடைய ஆதாரமே பாலா தான் என்று சூர்யா பேசி இருப்பது எல்லாம் புல்லரிக்க வைத்தது. சூர்யாவை தாண்டி சிவகுமாரும் இயக்குனர் பாலா மீது நிறைய நம்பிக்கை கொண்டவர். அதோடு பாலாவை தன்னுடைய பையன் போல அவர் பார்க்கிறார். நிகழ்ச்சி பாதியிலேயே நிறைய பேர் கிளம்பி இருந்தார்கள். ஆனால், சிவக்குமார், சூர்யாவும் நிகழ்ச்சி முடியும் வரை இருந்தார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.






