4 முதல் 80 வயசுவர ஆடுவாங்க..!விஸ்வாசம் நடன இயக்குனர் அசோக் ராஜா..!

0
598
Ashok-raja

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இன்ட்ரோ பாடல் வேட்டி கட்டு பாடல் என்பதை உறுதி செய்துள்ளார் இந்த படத்தின் நடன இயக்குனரான அசோக் ராஜா மாஸ்டர் . மேலும் ,வேட்டிகட்டு பாடல் செம மாஸாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சியில் அடம்பிடித்த அஜித் 

- Advertisement -


சிறியவர்கள் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு ஆட்டம் போடுவார்கள் எனவும் கூறியுள்ளார். இந்த படத்தில் வரும் 5 பாடல்களுக்கும் நடன இயக்குனராக இருந்துள்ள அசோக் வேட்டிகட்டு பாலுக்கு தான் ரசிகர்கள் அனைவரும் எழுந்து ஆடுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், ரசிகர்களை மனதில் வைத்தே இந்த படத்திற்கு ஒவ்வொரு நடன ஸ்டெப்பையும் அமைத்துள்ளதாகவும். இதுவரை அஜித் வேறு எந்த பாடலுக்கும் ஆடாத ஆட்டத்தை வேட்டிகட்டு பாடலுக்கு ஆடியுள்ளார் என்றும் கூறியுள்ளார் அசோக் மாஸ்டர். எனவே, வேட்டிகட்டு பாடல் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

-விளம்பரம்-
Advertisement