ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சி..!நானே நடிக்கிறேன்..!அடம்பிடித்த அஜித்..!விஸ்வாசம் ஸ்டண்ட் மாஸ்டர்..!

0
158
dileep

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ள ‘விஸ்வாசம்’ படத்திற்க்கு தான் ரசிகர்கள் வெறித்தனமாக வைட்டிங். இந்நிலையில் இந்த படத்தின் சண்டை காட்சி குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயன் சுவாரசியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

dileepsubrayan

ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்ராயன் பிதாமகன், ஜில்லா,காலா போன்ற பல்வேறு தமிழ் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், அஜித் நடித்த மங்காத்தா திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார். தற்போது விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் பணியாற்றி வரும் இவர் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

அந்த பேட்டியில் பேசிய திலீப் சுப்ராயன், தனது உடம்பில் பல காயங்கள் பல ஆபரேஷன்கள் செய்திருந்தாலும் எந்த ஒரு டூப் இல்லாமலும் எல்லா ஆக்ஷன் காட்சிகளையும் தானே நடிப்பார்.அமர்க்களம் படத்தில் என் அப்பாதான் ஸ்டண்ட், அந்த படத்தில் ஒரு காட்சியில் கண்ணாடியை உடைக்கும் சீன் இருந்தது, அப்பொழுது இருந்தது மிகவும் தடியான கண்ணாடி, அந்த காட்சியில் டூப் வைத்துக்கொள்ளலாம் என ஸ்டண்ட் மாஸ்டர் கூறினார்.

அதே போல அந்த ஸ்டண்ட் மாஸ்ட்ருக்கும் சம்பளம் கிடைக்கும் என்று கூறினார். ஆனால், அதற்கு அஜித் சார் ஒப்புக்கொள்ளவில்லை.அந்த கண்ணாடியை உடைத்தால் அந்த ஸ்டண்ட் மேனுக்கு எவ்வளவு பணம் கிடைக்குமோ அவர்களுக்கு நானே அந்த பணத்தை கொடுத்து விடுகிறேன் ஆனால் இந்த காட்சியை நான் தான் செய்வேன் என்று கடைசியில் அந்த காட்சியை அவர் தான் நடித்தார் என்று கூறியுள்ளார்.