முத்து பட நடிகை வீட்டில் கொள்ளையடிக்கபட்ட நகைகள் மீட்பு. கொள்ளையர்கள் யார் என்பது தான் ட்விஸ்ட்டே.

0
35210
jayabharathi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் நடிகை ஜெயபாரதி இவர் 1966 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான சின்னஞ்சிறு உலகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மலையாளத்தில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் மேலும் தமிழில் 26 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் இவர் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலின் தாயாக நடித்து இருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான முத்து படத்தில் நடிகர் சரத் பாபு தாயாக நடித்திருந்தார் இறுதியாக தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான இதில் படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
நடிகை ஜெயபாரதி வீட்டில் திருடு போன நகைகள் மீட்பு - காவலாளி, கார் ஓட்டுநர் கைது!

- Advertisement -

நடிகை ஜெயபாரதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சுப்பாராவ் தெருவில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் ஒரு வீடு இருக்கிறது ஆனால் இவர் சாலிகிராமத்தில் உள்ள மற்றொரு வீட்டில்தான் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்வதற்காக சாலி கிராமத்தில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கும் நகை களை எடுப்பதற்காக ஜெயபாரதி சென்றிருக்கிறார்.வீட்டிற்கு சென்று லாக்கரை திறந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சியடைந்த நடிகை ஜெயபாரதி நகைகள் காணாமல் போனது குறித்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தியபோது போலீசார் பார்க் பகதூர் மற்றும் இப்ராஹிம் என்ற இருவரை கைது செய்தார்கள். இவர்கள் இருவரும் வேறு யாரும் கிடையாது, நடிகை ஜெயபாரதியின் வீட்டில் பாதுகாவலராகவும் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றி வருபவர்கள் தான்.நடிகை ஜெயபாரதி சாலிகிராமத்தில் வசித்து வந்ததால் நுங்கம்பாக்கத்தில் இருந்த அந்த வீட்டைப் பார்த்துக்கொள்ள நேபாளத்தை சேர்ந்த காவலாளி ஹர்க் பகதூர் என்பவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக வேலை செய்து வந்துள்ளார். மேலும், நடிகை ஜெயபாரதியின் தற்காலிக ஓட்டுனர்கள் இப்ராஹீமும் இருந்து வந்துள்ளார்.

-விளம்பரம்-

கார் ஓட்டுநரான இப்ராஹிம் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்ற போது ஹர்க் பகதூருடன் அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இப்ராஹிம் தான் ஹர்க் பகதூருக்கு நகைகளை திருடும் யோசனையை கூறியிருக்கிறார். கடந்த 3 மாதத்தில் 31 சவரன் நகைகளை திருடி இருக்கிறார். திருடிய நகைகளை இருவரும் அமைந்தகரையில் உள்ள அடகு கடையில் விற்றுள்ளனர். தற்போது இருவரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

Advertisement