இந்நிலையில் இந்த பிரச்னைக்கு முழு காரணம் நடிகர் விஷாலும் மற்றும் அவருடன் இணைந்து செயல்படும் செல்வமணியே காரணம் என்றும் எனவே இது போன்ற போராட்டங்கள் தொடர்த்தால் நான் கண்டிப்பாக அவர்கள் முன் தீக்குளிப்பேன் என்றும் தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளர் தனபால் தெரிவித்துள்ளார்.
நாளை தமிழ் சினிமா சங்கம் ஸ்டெர்லைட் மற்றும் காவிரி மேலாண்மைக்காக போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக போராட்ட ஊர்வலம் நடத்த போகவுள்ள இந்த நிலையில், பொதுச் செயலாளர் தனபால் இப்படி தெரிவித்துள்ளது தமிழ் சினிமா சங்கத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




