Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.04.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'வா தலைவா வா தலைவா' - ரகுமானை தொடர்ந்து STR போட்ட தமிழ் ட்வீட்டை கண்டு சிலிர்க்கும் ரசிகர்கள். (அமித் ஷாவிற்கு பதிலடியா)

A
எழுதியவர்Ajju12 ஏப்ரல், 2022 அன்று 08:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் குறித்து போட்டுள்ள பதிவு பெரும் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

'வா தலைவா வா தலைவா' - ரகுமானை தொடர்ந்து STR போட்ட தமிழ் ட்வீட்டை கண்டு சிலிர்க்கும் ரசிகர்கள்.  (அமித் ஷாவிற்கு பதிலடியா)

சமீபத்தில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாகவும் னைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ரகுமானின் தமிழணங்கு பதிவு :

அதே போல தமிழ் சினிமாவில் இருக்கும் பல பரபலங்கள் அமித் ஷாவின் கருத்திற்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அதே போல சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஏ ஆர் ரஹ்மானிடம், பத்ரியாகையாளர் ஒருவர் இந்தி தான் இனைப்பு மொழி என்று அமித் ஷா கூறி இருக்கிறாரா என்று கேட்டாதற்கு 'தமிழ் தான் இணைப்பு மொழி ' என்று கூறிவிட்டு சென்றார்.

'வா தலைவா வா தலைவா' - ரகுமானை தொடர்ந்து STR போட்ட தமிழ் ட்வீட்டை கண்டு சிலிர்க்கும் ரசிகர்கள்.  (அமித் ஷாவிற்கு பதிலடியா)

பிரகாஷ் ராஜ் கண்டனம் :

ஏ ஆர் ரஹ்மானை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜும் இந்த விவாகரத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் எங்கள் மீது இந்தியை திணிக்காதீர்கள், பன்முகத்தன்மையை நாங்கள் நேசிக்கிறோம். எங்கள் தாய்மொழியை நேசிக்கிறோம். நாங்கள் என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? உங்கள் அஜென்டா என்ன? என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து இருந்தார்.

'வா தலைவா வா தலைவா' - ரகுமானை தொடர்ந்து STR போட்ட தமிழ் ட்வீட்டை கண்டு சிலிர்க்கும் ரசிகர்கள்.  (அமித் ஷாவிற்கு பதிலடியா)

சிம்புவின் 'தமிழால் இணைவோம்' ட்வீட் :

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்பு 'தமிழால் இணைவோம்' என்று பதிவிட்டு இருக்கிறார். இதே போல அனிருத்தும் 'தமிழால் இணைவோம்' என்று ட்வீட் செய்து இருக்கிறார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்தே சிம்பு, அனிருத் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் 'தமிழால் இணைவோம்' என பதிவிட்டுள்ளதாக இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

'வா தலைவா வா தலைவா' - ரகுமானை தொடர்ந்து STR போட்ட தமிழ் ட்வீட்டை கண்டு சிலிர்க்கும் ரசிகர்கள்.  (அமித் ஷாவிற்கு பதிலடியா)

முதல்வர் கண்டனம் :

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை மக்கள் மறக்கடிப்பதற்காக இது போல் ஹிந்தி மொழி பிரச்சினையை மீண்டும் மத்திய அரசு கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#ஏ ஆர் ரகுமான்#AR Rahman#STR#A R Rahman#சிம்பு
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement