Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தி.மு.கவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? - பிறந்த நாளில் கமல் சொன்ன சூசக பதில்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.11.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தி.மு.கவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? - பிறந்த நாளில் கமல் சொன்ன சூசக பதில்.

A
எழுதியவர்Arun7 நவம்பர், 2023 அன்று 08:32 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

திமுகவுடன் கமலஹாசனின் கட்சி கூட்டணி வைப்பது குறித்த சர்ச்சைக்கு கமலஹாசன் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். மேலும், கமல் அவர்கள் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

தி.மு.கவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? - பிறந்த நாளில் கமல் சொன்ன சூசக பதில்.

அதன் பின் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கமல் பிரச்சாரம் செய்து இருந்தார். இதை தொடர்ந்து 142 சட்டமன்றத் தொகுதிகளில் கமல் வேட்பாளர்களை நிறுத்தினார். அதோடு திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார். பின் மநீம தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், விடாமுயற்சியுடன் கமல் மக்கள் நீதி மையம் கட்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று கமலஹாசனின் 68 வது பிறந்த நாள்.

மு க ஸ்டாலின் வாழ்த்து பதிவு:

கமலஹாசன் தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். இதற்கு பலரும் கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அந்த வகையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கமலஹாசனுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து எழுதுகிறார். அதில் அவர், கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி - மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு! என்று கூறி இருக்கிறார்.

தி.மு.கவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? - பிறந்த நாளில் கமல் சொன்ன சூசக பதில்.

கமல் அளித்த பேட்டி:

மேலும், கமல் தன்னுடைய பிறந்தநாளின் போது காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார். இதனை அடுத்து கமல் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அப்போது கமலிடம், அமைச்சர்களோடு பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பது திமுக கூட்டணிக்கு அட்சரமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு கமலஹாசன், எங்களை இங்கு ஒன்று சேர்த்தது கட்சி அல்ல. நல்லெண்ணம் என்று கூறியிருக்கிறார்.

திமுக கட்சியுடன் கூட்டணி குறித்து கமல்:

இப்படி கமலஹாசன் கொடுத்த பதிலின் மூலம் இவர் திமுக கட்சியுடன் கூட்டணி வைப்பது தெளிவாக தெரிகிறது என்று பலரும் கூறி வருகிறார்கள். கூடிய விரைவில் இவர்கள் இரு கட்சிகளும் இணையும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

தி.மு.கவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? - பிறந்த நாளில் கமல் சொன்ன சூசக பதில்.

கமல் நடிக்கும் படம்:

இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இந்தபடம் விரைவில் வெளியாக உள்ளது. இதை அடுத்து தற்போது கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் KH234 படம் உருவாக்குகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. மேலும், இந்த படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

தலைப்புகள்
#மு க ஸ்டாலின்#Kamal#கமல்#Mk Stalin
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement