Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் வறுமையில் வாடிய பாகவதர் குடும்பம் - உடனடியாக ஸ்டாலின் செய்த உதவி.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் வறுமையில் வாடிய பாகவதர் குடும்பம் - உடனடியாக ஸ்டாலின் செய்த உதவி.

S
எழுதியவர்Siva1 மார்ச், 2023 அன்று 07:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் தங்குவதற்கு வீடு வேண்டும் என தமிழக முதல்வரிடம் மனு கொடுத்த நிலையில் தற்போது அவருக்கு தேவையான உதவிகள் கிடைத்து உள்ளது. தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் வறுமையில் வாடிய பாகவதர் குடும்பம் - உடனடியாக ஸ்டாலின் செய்த உதவி.

அதிலும் குறிப்பாக 1944 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் சென்னை பிராட்வே என்ற ஒரே திரையரங்கில் ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் நிகழ்த்தியது. அன்றய சென்னையான 'மதராஸ்' கால கட்டத்தில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார்.

தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு[1] சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959 இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்.

வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் வறுமையில் வாடிய பாகவதர் குடும்பம் - உடனடியாக ஸ்டாலின் செய்த உதவி.

தியாகராஜ பாகவதருக்கு கமலம், ராஜம் என்ற இரு மனைவிகள் இருந்தனர். இதில் முதல் மனைவி ஆன கமலத்தின் குடும்பம் மட்டுமே சென்னையில் வசித்துவருகின்றது. இரண்டாவது மனைவி ராஜத்தின் குடும்பம் பற்றி தகவல் தெறியவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தியாகராஜர் பாகவதரின் மகள் வயிற்று பேரன் சாய்ராம் முதல்-அமைச்சரின் தனி பிரிவில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

தற்போது தங்களது குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பதாகவும், வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். அவரின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு செல்லப்பட்டு இருந்த நிலையில், பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், வீடு ஒன்றினை ஒதுக்கித் தரவும் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவியையும் அறிவித்தும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்

வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் வறுமையில் வாடிய பாகவதர் குடும்பம் - உடனடியாக ஸ்டாலின் செய்த உதவி.

இது குறித்து, சாய்ராம் கூறுகையில், ''என் தாத்தாவை போலவே, நாங்களும் எப்போதும் பத்திரிகையாளர்களுக்கு கடமைப்பட்டு உள்ளோம். முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. அரசுக்கும் எங்களின் நிலையை எடுத்துரைத்த பத்திரிகைகளுக்கும் நன்றி,''என்று கூறி இருந்தார். அதில் கனவிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இன்று பாகவதர் மற்றும் ஸ்டாலின் இருவருக்கும் பிறந்தநாள் என்பது தான்.

தலைப்புகள்
#மு க ஸ்டாலின்#Mk Stalin#தியாகராஜ பாகவதர்#Bhagavathar
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement