Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
P1 4
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ரஜினிக்கு என் அரசியல் பிடிக்கும், இப்படம் வெளியாகி பல விவாதங்களை உருவாக்கும் - தங்கலான் இசையில் வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் பேச்சு

எழுதியவர்Rajkumar6 ஆகஸ்ட், 2024 அன்று 01:48 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'தங்கலான்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. சமீபகாலமாக 'தங்கலான்' படம் குறித்து செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் 'தங்கலான்' . கேஜிஎஃப் இல் இருந்த பூர்வ குடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

ரஜினிக்கு என் அரசியல் பிடிக்கும், இப்படம் வெளியாகி பல விவாதங்களை உருவாக்கும் - தங்கலான் இசையில் வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் பேச்சு

இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

பயத்தைப் போக்கியது வெங்கட் பிரபு தான்

நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை. நான் நினைக்கும் கருத்துக்களை எடுத்து விடலாம் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் அப்படி சொல்ல முடியுமா என்ற பயம் வந்தது. அந்த பயத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தான், 'சென்னை 28' என்ற படத்தில் மூலம் போக்கினார்.

https://www.youtube.com/watch?v=8m402t0orCY&t=233s

ரஜினிக்கு என் அரசியல் பிடிக்கும்:

ஒரு சொல்லப்படாத கதையை கொண்டாட்டத்தின் மூலம் மக்களிடம் சேர்க்கலாம் என்று அவரிடம் தான் நான் கற்றுக் கொண்டேன். அதனால் தான் ஏற்கனவே எழுதிய படங்களை விட்டுவிட்டு 'அட்டகத்தி' என்ற கதையை எழுதினேன்‌. அடுத்த படம் மக்களுக்காக இருக்க வேண்டும் என்று 'மெட்ராஸ்' எடுத்தேன். அதைப் பார்த்து தான் ரஜினிகாந்த் எனக்கு 'கபாலி' வாய்ப்பு கொடுத்தார். அவருக்கு என் அரசியல் ரொம்ப பிடிக்கும். அதேபோல், சார்பட்டா படத்துக்கு பிறகு நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று விக்ரம் சொன்னார்.

விக்ரம் குறித்து:

சினிமாவுக்காக தன்னை வருத்திக் கொள்கிற, கலையை நேசிக்கிற ஒரு கலைஞனுடன் சேர்ந்து பணிபுரிவது சுலபமான விஷயம் இல்லை. இந்தப் படம் ஒரு சவாலாக இருக்கும் என்று நினைத்தபோது, முதல் நாள் படப்பிடிப்பிலேயே நான் எதிர்பார்த்த தங்கலானாக வந்து அனைத்தையும் விக்ரம் சுலபமாகிவிட்டார். அதேபோல், நடிகர் பசுபதி போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் போட்டி மனப்பான்மையுடன் நடித்திருக்கிறார். பின் பார்வதிக்காகவே ஒரு கதை எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

ரஜினிக்கு என் அரசியல் பிடிக்கும், இப்படம் வெளியாகி பல விவாதங்களை உருவாக்கும் - தங்கலான் இசையில் வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் பேச்சு

தங்கலான் விவாதங்களை உருவாக்கும்:

இந்தக் கதையை சொன்னவுடன் அவர் உடனே ஒப்புக்கொண்டார். ஏன் படப்பிடிப்பில் சரியாக பேசுவதில்லை என்று பார்வதி கேட்டுக் கொண்டே இருந்தார். பொதுவாக என் படங்களின் படப்பிடிப்பு மிகவும் ஜாலியாக இருக்கும். ஆனால், இந்த படத்திற்காக கருணையற்ற மனிதனாக மாறி அனைவரையும் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இந்த சினிமா உங்களுடைய உணவுகளை கண்டிப்பாக தொடும் என்று நம்புகிறேன். அதன் மூலம் இந்த சினிமா பல விவாதங்களை உருவாக்கும் என்று தங்கலான் குறித்து கூறியுள்ளார்

தலைப்புகள்
#Pa Ranjith#Rajinikanth#தங்கலான்#பா ரஞ்சித்#Thangalaan#ரஜினிகாந்த
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement