வனிதாவின் கொட்டத்தை அடக்கிய தர்ஷன்.! அதிர்ந்து போன பிக் பாஸ் வீடு.!

0
5128
Vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக தர்ஷன் தான் ஹைலைட்டாக தெரிந்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவது வனிதா மட்டும் தான். அவரை யாரும் எதிர்த்து பேச பயந்த போது தர்ஷன் மட்டும் தான் வனிதாவை எதிர்த்து தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் தர்ஷன் மேலும் நல்ல அபிப்ராயத்தை பெற்றுள்ளார். நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தவாரம் கேப்டனை தேர்ந்தெடுப்பதற்காக டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது அதில் சாக்ஷி வனிதா மற்றும் மோகன் வைத்யா பங்குபெற்றனர்.

- Advertisement -

இந்த டாஸ்க் என்னவென்றால் ஒருவர் ஓடவேண்டும் மற்றொருவர் அவரை துரத்திப் பிடித்து அவர் மீது ஒரு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். அந்த வகையில் முதலில் மோகன் வைத்யா ஓட அவரை வனிதா துரத்திப் பிடித்தார் பின்னர் மோகன் வைத்யா அவுட்டானார்.

-விளம்பரம்-

அதன்பின்னர் சாக்க்ஷி ஓட அவரை வனிதா துரத்தினார் வனிதா. ஆனால்,வனிதாவால் ஓட முடியாததால் இந்த டாஸ்க் நியாயமானது இல்லை இதனை இங்கு விளையாடவே முடியாது அதனால் நான் இந்த டாஸ்கில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றார். இதனால் கடுப்பான தர்ஷன் மோகன் வைத்யா விளையாடும்போதே இதை சொல்ல வேண்டியது தானே அவர் இப்போது அவுட்டாகி விட்டார் இல்ல.

இப்போ வந்து ஏன் இதைச் சொல்கிறீர்கள் என்றதும் டென்ஷனானவனிதா இதுக்கும் சம்பந்தம் இல்லை நீ ஏன் என்னிடம் கத்துகிறாய் என்றதும், இந்த வீட்டில் நீங்கள் மட்டும் கருத்து சொல்ல முடியாது எல்லோருக்குமே சொல்ல உரிமை உண்டு என்றதும் அதற்கு வனிதா நேற்று முளைத்த காளான் நீ என்னிடம் கத்தாதே என்றார் மேலும் மரியாதை என்றால் என்னவென்று தெரிந்து கொள் என்று வனிதா கூற, அதனை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார் தர்ஷன்.

இறுதியில் தர்ஷனை அனைவரும் சமாதானப்படுத்த கடுப்பான தர்ஷன் அவர் எப்போதுமே இப்படித்தான் கத்திக்கொண்டே இருக்கிறார் மற்றவர்களைப் பேச விடுவது இல்லை கத்தி பேசினால் அனைத்தும் சரியாகிவிடும் என்று அவர் நினைக்கிறார் இதனை மாற்ற வேண்டும் என்று கூறியதும் மற்ற போட்டியாளர்களும் தரிசனை ஆதரித்தனர் இறுதியில் இருவருக்கும் பஞ்சாயத்து செய்த சேரன் தரிசனை வனிதாவிடம் மன்னிப்பு கேட்க வைத்தார் வனிதாவும் தரிசனம் சரணடைந்து பரவாயில்லை விடு என்று கூறிவிட்டார்

Advertisement