சுந்தர். சியின் ‘காபி வித் காதல்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

0
946
cofee
- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, கிங்க்ஸ்லி, பிரதாப் போத்தன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை குஷ்பூ தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த தலைமுறை காதலை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். பல எதிர்பார்ப்புடன் வெளியாகிருக்கும் காபி வித் காதல் படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மூன்று பேரும் அண்ணன் தம்பிகளாக இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேருக்கும் டிடி தங்கையாக இருக்கிறார். கல்யாணம் முடிந்த ஸ்ரீகாந்துக்கு மனைவியின் மீது ஆசை குறைந்து விடுகிறது. அவருடைய மனம் வெளியில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம், வசதியாக இருக்கும் ஜீவாவை லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஐஸ்வர்யா ஏமாற்றி கழட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் சிறு வயதிலிருந்து தன்னை உருகி உருகி அமிர்தா ஒருதலையாக காதலிக்கிறார்.

- Advertisement -

ஆனால், ஜெய் அவர் காதலை புரிந்து கொள்ளவில்லை. ஜெய்க்கு பெரிய ஹோட்டல் அதிபராக வேண்டும் என்று ஒரு இடம் பார்க்கிறார். அந்த இடத்தின் உரிமையாளர் மகளை ஹோட்டல் கனவிற்காக திருமணம் செய்து கொள்ள ஜெய் ஒத்துக் கொள்கிறார். அந்த பெண் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அமெரிக்காவிலிருந்து வந்த போது ஜெய்க்கு பதிலாக ஜீவா அந்த பெண்ணை காதலிக்கிறார். இருவருமே காதலிக்கிறார்கள்.

படத்தின் கதை:

ஒரு கட்டத்தில் தன் தம்பியின் கனவிற்காக தன் காதலை மறைத்து ஜீவா பெற்றோர் சொல்லும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். ஜீவா, ரைசாவை தான் திருமணம் செய்கிறார். ஆனால், ரைசாவிடம் கொஞ்சம் அப்படி இப்படி முன்பே இருந்தவர் மூத்த அண்ணா ஸ்ரீகாந்த் என்பது தெரிகிறது. இப்போது யார் யாரை திருமணம் செய்தார்கள்? யார் யாரை பிரிந்தார்கள்? என்பதே படத்தின் மீதி கதை. கிளாமர், பாடல், காமெடி என தன்னுடைய வழக்கமான கான்செப்ட் கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

-விளம்பரம்-

ஒரு குழப்பமான கதையை கையில் எடுத்து அதில் காமெடி காட்சிகளை புகுத்தி ஜாலியாக கொண்டு செல்வது தான் சுந்தர் சி யின் வழக்கம். ஆனால், இந்த படத்தில் இவர் மிக மிகக் குழப்பமான கதையை கையில் எடுத்து காமெடியை கம்மியாக கொடுத்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல என்ன தாண்டா நடக்குது? என்று பார்வையாளர்களை டென்ஷன் படுத்திருக்கிறது. யோகி பாபு, கிங்ஸ்லி காட்சிகள் எல்லாம் பெரிய சிரிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு புது விதமான காட்சிகள் இல்லை. சுந்தர் சி படம் என்றாலே கிளாமர் காட்சிகள் இருக்கும். ஆனால், இதில் முதல் பாதி முழுவதும் கிளாமர் பயங்கரமாக இருக்கிறது என்றே சொல்லலாம். இசை, டெக்னிக்கல் வொர்க், ஒளிப்பதிவு எல்லாம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. தவிர மற்றபடி பெரிதாக படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. ஒரு சுமாரான படம் என்று சொல்லலாம்.

நிறைகள் :

படத்தின் முதல் பாதி நன்றாக இருக்கிறது.

ஒளிப்பதிவு, பின்னனி இசை பக்கபலம்.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

குறைகள் :

மிக குழப்பமான கதை என்றே சொல்லலாம்.

காமெடிகள் குறைவு,

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.

கதைக்களத்தில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் காபி வித் காதல் – நன்றாக இருந்த தான் குடிக்க முடியும்

Advertisement