கோமாளி படத்தில் வரும் பஜ்ஜி கடை ஆன்டியா இது ? பார்த்தா வாயில கைவச்சி ஷாக்காவீங்க.

0
123928
komali
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. சமீப காலமாகவே நடிகர் ஜெயம் ரவி அவர்கள் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த படம் “கோமாளி”. இந்த படத்தை குறும் பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவர் தான் இயக்கி உள்ளார். இதுவே அவர் இயக்கிய முதல் படம் ஆகும். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து உள்ளார். 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த 90s இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி உள்ளார் இயக்குனர்.

-விளம்பரம்-
View this post on Instagram

The Effects Of Black And White..

A post shared by Kavita Radheshyam (@actresskavita) on

மேலும், இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு வசூலிலும் நல்ல வேட்டை ஈட்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கோமாளி படத்தில் பஜ்ஜி கடை காமெடி ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அது மட்டும் இல்லாமல் இந்த பஜ்ஜி கடை காமெடி நகைச்சுவைக்கு மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கதைக்கு ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் நடிகை கவிதா ராதேஷியாம். இவர் பாலிவுட் நடிகை ஆவார்.

இதையும் பாருங்க : எல்லா புகழும் அஜித்துக்கே. சினிமாவில் முதல் விருதை வாங்கிய நடிகர் ட்வீட்.

- Advertisement -

இவர் இந்தியில் பல சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் விலங்குகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கு எதிராக மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் நடிகை கவிதா ராதேஷியாம் அவர்கள் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 இன் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. அதோடு இவர் கடந்த ஆண்டு வெளியான கோமாளி படத்தில் நடித்திருந்தார். தற்போது கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கும் காசுரன் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் டமால் டுமீல் படத்தை இயக்கிய ஸ்ரீ, எஸ் ஆர் ஜே இருவரும் இணைந்து தான் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
View this post on Instagram

The Fat Actress In #Delhi..

A post shared by Kavita Radheshyam (@actresskavita) on

இந்த படத்தில் நாயகனாக ஸ்ரீ நடிக்கிறார். அங்கனா ஆர்யா நாயகியாகவும் நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் உமரா நிவாசன், லாரன்ஸாக அவினாஷ், மாயாவாக கவிதா ராதேஷியாம் மற்றும் பலர் நடித்து உள்ளனர். இந்த படத்தை ஜித்தா மோகன் அவர்கள் இயக்கி உள்ளார். இந்த படம் காசுக்கு ஆசைப்படும் காசு அரக்கர்களை பற்றிய கதையாகும். மேலும், பணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை கூறும் கதை ஆகும்.

Advertisement