40 வருட சினிமா வாழ்க்கை, 500கும் மேற்பட்ட படங்கள், கவுண்டமணி – செந்திலுடன் நடித்து கிடைக்காத பெருமையை பெற்றுத்தந்த வடிவேலு – நடிகர் அமிர்தலிங்கம்

0
940
Amirthalingam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் அமிர்தலிங்கம். இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் விவசாயி பின்னணியிலிருந்து வந்தவர். சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் பல கடை ஒன்று வைத்திருந்தார். அங்கு வந்த சினிமா மற்றும் நாடகத்துறை நபர்கள் மூலம் தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு சிறுவயதிலிருந்தே நாடகத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம். பின் பல நாடக மேடைகளில் அமிர்தலிங்கம் நடித்திருக்கிறார். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. பின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதிலும் இவர் வடிவேலு காமெடி டீமில் தான் அதிகம் இருப்பார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் ஹரியின் படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் தான் இவர் நடித்து இருப்பதை பார்க்கலாம். மேலும், இவர் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேல் பயணித்து 500 படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவரிடம் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது. அதில் அவர் தன்னுடைய சினிமா துறை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு துறையில் சாதிக்கலாம் என்று தான் நினைத்தேன். அதுவும் சினிமா என்பது என்னுடைய லட்சியம்.

- Advertisement -

அமிர்தலிங்கம் அளித்த பேட்டி:

அதில் இத்தனை வருடங்களாக இருப்பது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நாம மறைந்தாலும் நம்முடைய பெயரும் புகழும் என்றும் மறக்காத வகையில் இருக்கனும் என்று நினைத்தேன். ஆரம்ப காலத்தில் நான் மேடை நாடகங்களில் நடித்து இருந்தேன். பிறகு தான் 1980ல் சினிமா வாய்ப்பு அமைந்தது. முதலில் பெருசா எந்த பாடத்திலும் சாதிக்க முடியவில்லை. பல படங்களுக்குப் பிறகு தான் என்னையே சிலருக்கு தெரிய வந்தது. அதுவும் கவுண்டமணி ,செந்தில் கூடவெல்லாம் நிறைய படங்களில் நடித்து இருந்தேன். ஆனால், அப்போ என்னைப் பற்றி பலருக்கும் தெரியவில்லை.

வடிவேலு செய்த உதவிகள்:

வடிவேலு உடன் நடிக்க ஆரம்பித்த போது தான் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவரோடு நான் முதன்முதலாக பவித்ரா படத்தில் நடித்தேன். அப்படியே அவருடன் பல படங்கள் நடித்திருக்கிறேன். அவருடன் நடித்த காட்சிகள் எல்லாம் எனக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி தந்தது. பின் அவரை தொடர்ந்து விவேக் கூட நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது சுலபமான விஷயம் இல்லை. அப்படி கிடைத்தாலும் அதை தக்க வைப்பது ரொம்ப கஷ்டம். பல போராட்டங்களுக்கு பிறகு தான் எனக்கும் படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.

-விளம்பரம்-

வடிவேலு வாங்கி தந்த வாய்ப்பு:

முதலில் வடிவேல் இடம் நடிக்க வாய்ப்பு கேட்டு போனேன். அவர் கொடுத்த வாய்ப்புதான் என் வாழ்க்கையே மாற்றியது. ஒரு படத்தில் அவர்தான் அந்த கேரக்டர் பண்ண வேண்டியது. பின் அவர் டைரக்டர் ஹரி சார் கிட்டே என்னை பற்றி சொல்லி அந்த படத்தில் நடிக்க கேட்டார். ஆனால், அவர் வேறு ஒரு நபரை போட யோசித்து இருந்தார். கடைசியாக வடிவேல் டைரக்டர்கிட்ட இந்த சீனை டிஸ்கஸ் பண்ணிட்டு நாளை எடுக்கலாம் என்று சொன்னார். மறுநாள் வடிவேல் சார் உடன் நானும் சென்றேன். கடைசி நிமிஷத்தில் வேற வழியில்லாமல் என்னை நடிக்கச் சொன்னார் இயக்குனர்.

வடிவேலு பாராட்டிய காரணம்:

நானும் ஒரே ஷாட்டில் நடித்து ஓகே பண்ணிட்டேன். வடிவேலு அப்படியே வந்து என்னை கட்டிப் பிடித்து பாராட்டினார். இதற்காக அவர் அவ்வளவு பாடுபட்டார். இந்த கேரக்டரை நான் தான் பண்ணனும் என்பதில் ரொம்பவே உறுதியாக இருந்தார். நானும் அவர் நம்பிக்கையை காப்பாற்றும் மாறி நடித்தேன். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. நான் படம் முழுவதும் நடித்திருந்தால் கூட அவ்ளோ பெயர் வாங்கி இருக்க மாட்டேன். என்னை சினிமா உலகில் முழுவதும் தெரிய வைத்தது வடிவேல் தான் என்று பெருமையாக வடிவேல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement