அசத்தப்போவது யாரு பிரபல காமெடி நடிகரின் கால் உடைப்பு – அடியாட்களுடன் அராஜகம் செய்த மனைவி உள்ளிட்ட கைது

0
2041
- Advertisement -

அசத்தப்போவது யாரு பிரபல காமெடி நடிகரின் காலை அடியாட்கள் வைத்து உடைக்கப்பட்டதால் அவருடைய மனைவி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைதாகி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதோட நிகழ்ச்சியில் வரும் பிரபலங்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் வெங்கடேசன். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதால் வெள்ளி திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். பின் சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் தன்னுடைய சொந்த ஊருக்கே வந்துவிட்டார். தற்போது இவர் மதுரையில் விளம்பர ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

- Advertisement -

அசத்தப்போவது யாரு வெங்கடேசன்

அதில் இவர் விளம்பர படங்கள் எடுப்பது மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவிலும் இவர் நடனமாடுவது, சமூக அரசியல் கருத்துகளை தெரிவிப்பது என்றும் செய்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் பிரதமர் மோடி குறித்தும், அமைச்சர் அமித்ஷா குறித்தும் பல விமர்சனங்களை வைத்திருந்தார். இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் சிலர் அவருடைய வீட்டுக்கே சென்று நடிகர் வெங்கடேசனின் காலை உடைத்திருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெங்கடேசன் குடும்ப விவகாரம்:

அதாவது, வெங்கடேசனுக்கு வேறொரு பெண் உடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது இவருடைய மனைவி பானுமதிக்கு தெரியவந்திருக்கிறது. இதை குறித்து அவர் கண்டித்தும் இருக்கிறார். இருவருக்குமே இது தொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. பின் பானுமதி இடம் விவாகரத்து கேட்டு வெங்கடேசன் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இந்த வழக்கு நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது. இருந்தாலும், இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் ஓட்டுனராக பணியாற்றும் மோகன் என்பவரிடம் சொல்லி வெங்கடேசனின் காலை உடைக்க பானுமதி திட்டமிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

வெங்கடேசனை தாக்கிய நபர்கள்:

இதற்காக ராஜ்குமார் என்பவரை மோகன் அறிமுகம் செய்து வருகிறார். இந்த வேலையை செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் ராஜ்குமார் கேட்டிருக்கிறார். அவ்வளவு பணத்தை கொடுக்க முடியாது என்பதால் பானுமதி அந்த திட்டத்தை கை விட்டிருக்கிறார். பின் தன்னுடைய உறவினர் பாஜகவை சேர்ந்த வைரமுத்து என்பவரை தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரின் நடத்தை குறித்து கூறியிருக்கிறார். இதனால் வெங்கடேசன் மீது கோபத்தில் இருந்த வைரமுத்து இதுதான் சந்தர்ப்பம் என்று கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி இரவு வெங்கடேசனை தாக்குவதற்கு திட்டம் தீட்டி இருக்கிறார்.

கைதான குற்றவாளிகள்:

பின் வைரமுத்து, மலை சாமி, ஆனந்தராஜ் உட்பட 3 பேரும் சேர்ந்து வெங்கடேசனை கட்டையால் சரா மாறியாக அடித்திருக்கின்றனர். அருகில் இருந்தவர்கள் போலீஸிற்கு உடனடியாக தகவல் கொடுத்து இருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கும் போலீஸ் தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்து வெங்கடேசனை மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கிறார்கள். இதனை அடுத்து வெங்கடேசன் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை போலீசார் வழக்கு பதிவு செய்து அவருடைய மனைவி பானுமதி, ராஜ்குமார், மோகன், வைரமுத்து. மலை சாமி ஆகிய ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். தற்போது இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement