பரிதாப நிலையில் குடும்பத்துடன் இருக்கும் நிலைமை குறித்து நகைச்சுவை நடிகர் வெளியிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் ஆகிய கதாபாத்திரங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவிற்கு நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. ஒரு படம் என்றாலே இவை அனைத்தும் கலந்தது தான். அந்த வகையில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் இல்லாமல் எந்த ஒரு படமும் வெளிவந்தது கிடையாது.
ரொமான்ஸ் இல்லாமல் கூட படம் இருந்திருக்கிறது. ஆனால், நகைச்சுவை இல்லாமல் எந்த படங்களும் இல்லை. நகைச்சுவை என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது நாகேஷ், கவுண்டமணி, செந்தில் தான். இப்படி சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை பல நகைச்சுவை நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். இப்படி நகைச்சுவை மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்து பிடித்த ஏராளமான நடிகர்கள் இருக்கிறார்கள்.
நடிகர் பரந்தாமன் குடும்பம்:
இந்த நிலையில் ஒரு நகைச்சுவை நடிகரை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். அவருடைய பெயர் பரந்தாமன். இவர் ஓசூரில் உள்ள சிவலிங்கபுரம் என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 28 வயது ஆகின்றது. இவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அதில் 3 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருடைய தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை வீட்டில் சங்கிலியால் தான் கட்டப்பட்டு இறக்கிறார்.
பரந்தாமன் திரைப்பயணம்:
மேலும், எலும்பு முறிவு ஏற்பட்ட அவரது தாய், மாற்றுத்திறனாளியான சகோதரர் உடன் நகைச்சுவை நடிகர் பரந்தாமன் வசித்து வருகின்றார். இவர் உடல் வளர்ச்சி குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயதில் இருந்தே இவர் நாடகம், தெருக்கூத்து போன்றவற்றில் நடித்து வருகிறார். தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் பலருடைய பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் சிறு ரோலில் நடித்து இருக்கிறார்.
பரந்தாமன் நிலை:
இவர் எம்ஏ சினிமா படிப்பை படித்து இருக்கிறார். இவர் சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக கூட நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் பரந்தாமன் வெளியிட்டிருந்த வீடியோ பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, சாதாரண மக்கள் மட்டுமில்லாமல் பல பிரபலங்களும் கொரோனா ஊரடங்கில் தவித்து போய் இருந்தது அனைவருக்குமே தெரியும். உணவில்லாமல், தங்க வீடு இல்லாமல் பல குடும்பங்கள் நோயால் அவதி படுவதை விட பசிக்கொடுமையால் அவதிப்பட்டு இருந்தார்கள். அதில் பரந்தாமனும் ஒன்று.
பரந்தாமன் அளித்த பேட்டி:
ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தன் குடும்பத்துடன் வாழ்ந்து இருக்கிறார். ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் நகைச்சுவை நடிகர் குடும்பத்துடன் கேள்விக்குறியாக இருந்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது இவர் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், எனது குடும்பத்துடன் நிரந்தர வருமானம் கிடைக்கும் படி ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா? எனக் கேட்டிருக்கிறார். அந்தப் பேட்டி வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.