ஜேம்ஸ் என்ற பெயரை எப்படி தமிழ்ல சொல்றது – கேலி செய்தவருக்கு ஜேம்ஸ் வசந்தன் பதிலடி.

0
1942
- Advertisement -

ஜேம்ஸ் வசந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர். மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். அதே போல பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடிந்த்து. ஜமேஷ் வசந்தன் சிறிது காலமாக சினிமா மற்றும் தொலைக்காட்சியில் தலை காண்பிக்காமல் இருக்கிறார்.

- Advertisement -

ஆனால், சமூக வலைதளத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது போட்டியாளர்களை பற்றி கிழித்து தொங்கவிட்டார்.சமீப நாட்களாக ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிற மொழி சொற்களின் உண்மையான தமிழ் சொற்களை பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதற்கு ரசிகர் ஒருவர், ஜேம்ஸ் வசந்தன் என்ற பெயரை தமிழில் எப்படி சொல்வது என்று கேலியாக கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த ஜேம்ஸ் வசந்தன் உங்கள் பெயரை எப்படி தமிழில் அளிப்பீர்களோ அப்படி தான் என்று பதிவிட்டுள்ளார். மேலும், தமிழார்வத்திற்காக பதிவு போடுறத விட ஒரு கூட்டம் கதர்றத பாக்கவே போடணும் போல இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement