இறுதியாக காமெடி நடிகர் சதீசுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.! நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ.!

0
9039
satheesh
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகர்கள் என்றால் அது யோகி பாபு, சூரி மற்றும் சதீஷ் தான். இதில் யோகி பாபு பல்வேறு படங்களில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க சதீஷ் மற்றும் சூரி காட்டில் கொஞ்சம் கம்மியாக தான் வாய்ப்புகள் குறைவாக தான் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

இருப்பினும் சூரியை விட சதீஷ் அதிகபடியான பட வாய்ப்புகளை பிடித்து விடுகிறார். எப்போதும் களகளவேனு இருக்கும் சதீஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்ததாக ஒரு செய்தி பரவியது. அதே போல இவர் கீர்த்தி சுரேஷுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியானது.

இதையும் பாருங்க : இறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம்.! முக்கிய வாரத்தில் வெளியேற போகும் நபர் யார் !

- Advertisement -

இதனால் கீர்த்தி சுரேஷுக்கு சதீஷுக்கு திருமணம் முடிந்ததாக கூட ஒரு வதந்தி பரவியது. இதனால் சதீஷை மற்ற நடிகர்களும் சதீஸ் எந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் தனது திருமணம் குறித்த கிடலுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சதீஸ். ஆம், சதீஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

சமீபத்தில் நடிகர் சதீஷுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் கிரேசி குழுவில் இருந்து வந்த சதீஷ் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வரும் சதீஷ் தற்போது ஹீரோவாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் இயக்கத்தில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தில் மோகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நாகசுதர்சன் ‘சிறிய இடைவேளைக்கு பின்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement