என்ன தலைவா எலச்சிட்டீங்க. சதீஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
4465
sathish
- Advertisement -

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சந்தானத்தின் காமெடி குறைந்து போன நிலையில் தற்போது பல்வேறு காமெடி நடிகர்கள் வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான காமெடி நடிகர் சதீஷ். தமிழில் சந்தானம், யோகி பாபு, சூரி வரிசையில் தற்போது உள்ள சிறந்த காமெடி நடிகர் சதீஷ் ஆவார். முதலில் நடிகர் சதீஷ் அவர்கள் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர். ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்தார்.

-விளம்பரம்-
View this post on Instagram

??

A post shared by Sathish (@actorsathish) on

அதுமட்டும் இல்லாமல் நடிகர் சதீஸ் 2003 ஆம் ஆண்டு வெளியான விடாது சிரிப்பு என்ற சீரியல் ஒன்றிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம். ஆனால், சில காரணங்களால் இந்த தொடர் 25 எபிஸோடகள் மட்டுமே ஒளிபரப்பாகி முடிவடைந்தது. சமீப காலமாகவே இவர் படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். ஏன் என்றால் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நடிகர் சதீஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்தது. இயக்குனர் மோகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நாகசுதர்சன் சகோதரி சிந்து என்பவரை தான் நடிகர் சதீஸ் திருமணம் செய்து உள்ளார்.

இதையும் பாருங்க : நீண்ட மாதங்களுக்கு பின் சரவணனை சந்தித்த முதல் பெண் போட்டியாளர் வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

இதனை தொடர்ந்து நடிகர் சதீஸ் அவர்கள் தற்போது படங்களில் பிசியாக நடிக்க தயாராகி விட்டார். இந்நிலையில் தற்போது நடிகர் சதீஸ் அவர்கள் தன்னுடைய உடல் எடையை பயங்கரமாக குறைத்து உள்ளார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2”. இந்த படத்தில் நடிகர் சதீஸ் நடித்து வருகிறார். மேலும், இவர் இந்த படத்திற்காக தான் இந்த அளவிற்கு உடல் எடையை குறைத்து உள்ளார்.

-விளம்பரம்-

தற்போது நடிகர் சதீஸ் உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது சதீஷா?? என்று ஆச்சரியத்தில் உறைந்து போய் உள்ளார்கள். அதோடு பல கமெண்டுகளை கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன் ‘ திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் நிலையில் வருகிறது. இந்த படத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ‌ஷங்கர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் அவர்கள் ஆபரேஷன் நடந்ததால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

Advertisement