நீண்ட மாதங்களுக்கு பின் சரவணனை சந்தித்த முதல் பெண் போட்டியாளர் வைரலாகும் புகைப்படம்.

0
29253
saravanan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகைகளில் மதுமிதாவும் ஒருவர். இவர் ஓகே ஓகே, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ராஜா ராணி, ஜில்லா, டிமான்டி காலனி உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இவர் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். மதுமிதாவை அவருடைய ரசிகர்கள் ஜாங்கிரி, தேனடை என்று தான் செல்லமாக அழைப்பார்கள். மேலும், நடிகை மதுமிதா அவர்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசத்தி பட்டையை கிளப்புவார். இதனாலே அவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

-விளம்பரம்-

மதுமிதா அவர்கள் வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மதுமிதா அவர்கள் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மதுமிதாவுக்கும், சக போட்டியாளர்களுக்கும் இடையே நிறைய பிரச்சனை ஏற்பட்டது. இதனால் நடிகை மதுமிதா அவர்கள் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழகத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதியை மீறி நடந்து கொண்டதால் மதுமிதாவை வெளியேற்றியது பிக் பாஸ் குழு.

- Advertisement -

இதையும் பாருங்க : மேனஜர் செய்த குழப்பத்தால் காதலுக்கு மரியாதை பட வாய்ப்பை இழந்த இளம் ஹீரோ.

பின்னர் விஜய் டிவி, மதுமிதா மீதும்; மதுமிதா, விஜய் டிவி மீதும் என மாத்தி மாத்தி போலீசில் புகார் அளித்தார்கள். இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் வனிதா, லாஸ்லியா, சாண்டி, தர்சன், அபிராமி என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார் அளித்து இருந்தார் நடிகை மதுமிதா. இந்த நியூஸ் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் நடிகை மதுமிதா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மதுமிதாவும், தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சரவணன் அவர்களும் இணைந்து செல்பி எடுத்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

-விளம்பரம்-

நடிகர் சரவணன் அவர்கள் கல்லூரி நாட்களில் பேருந்தில் செல்லும் போது பெண்களை இடித்து கிண்டல் பண்ண விவகாரத்தில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.பின் சரவணன் அவர்கள் மன்னிப்பும் கேட்டார். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகை மதுமிதாவும், பிக்பாஸ் நடிகர் சரவணன் அவர்களும் சேர்ந்து விளம்பர படமொன்றில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த விளம்பர படத்தின் ஷூட்டிங் கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. பின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் இருவரும் கூலிங்கிளாஸ் போட்ட படி அமர்ந்து இருந்தார்கள்.

அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சரவணனை சந்தித்த முதல் பெண் போட்டியாளரும் மதுமிதா தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற எந்த நிகழ்ச்சிக்கும் சரவணனும், மதுமிதாவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement