ஊருக்கு செல்லும் தன்னை போக விடாமல் சூட்கேசில் படுத்து அடம்பிடிக்கும் மகள் – சதிஷ் பகிர்ந்த குயூட் புகைப்படம்.

0
8708
sathish
- Advertisement -

காமெடி நடிகரான சதிஷ் முதன் முறையாக தன் மகனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடிகள் ஓய்ந்த நிலையில் பல்வேறு காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் கிரேஸி மோகன் குழுவிலும் பணியாற்றியுள்ளார். சதிஷ் 2003 இல் வெளியான விடாது சிரிப்பு என்ற சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த காமெடி தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி யுள்ளது. ஆனால் சில பல காரணங்களால் இந்த தொடர் 25 எபிஸோடகள் மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது.

இதையும் பாருங்க : அடையாளம் தெரியாத அளவு மாறிப்போய்யுள்ள சிம்பு, விஜய் பட நடிகை – பாத்தா நம்பவே மாடீங்க.

- Advertisement -

தற்போது யோகி பாபு மற்றும் சூரிக்கு இடையே பட வாய்ப்புகளை பிடிக்க போட்டி நடந்து வந்தாலும் சூரியை விட சதீஷ் அதிகபடியான பட வாய்ப்புகளை பிடித்து விடுகிறார்.எப்போதும் களகளவேனு இருக்கும் சதீஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்ததாக ஒரு செய்தி பரவியது. அதே போல இவர் கீர்த்தி சுரேஷுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியானது.

அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் சதிஷுக்கு திருமணம் முடிந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் ஊருக்கு செல்லும் தன்னை தன் மகள் செல்லவிடாமல் இருப்பது போல தனது மகள் சூட்கேசில் படுத்துக்கொண்டு இருக்கும் குயூட் புகைப்படம் மூலம் முதன் முறையாக தன் மகளை காட்டியுள்ளார் சதிஷ்.

-விளம்பரம்-
Advertisement