செந்தில் உட்பட அவரது குடும்பத்தில் இத்தனை பேருக்கு கொரோனா (அவர் மகன் டாக்டர் ஆச்சே அப்பயுமா)

0
885
senthil
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஷால் மற்றும் அவரது தந்தை, சரத் குமார், கருணாஸ், லோகேஷ் கனகராஜ் என்று பல நடிகர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர்.இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் செந்திலும் அவரது குடும்பத்தில் உள்ள 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் எவர் கிரீன் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் செந்தில். சினிமா உலகில் நகைச்சுவை பார்ட்னர்ஸ் என்று கேட்டாலே சின்ன குழந்தை கூட கவுண்டமணி– செந்தில் என்று தான் சொல்லும். இவர்களுடைய காமெடிக்கு அடிச்சுக்க இன்னும் யாரும் வரவில்லை என்று தான் சொல்லணும். அப்போதெல்லாம் இவர்களுடைய நகைச்சுவைக்காகவே படம் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும். ஆனால், அவர்களுக்கு பிறகு நகைச்சுவையில் யாராவது வந்தார்கள் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

இதையும் பாருங்க : தனது இரண்டாம் திருணத்தின் பத்திரிக்கையை வெளியிட்ட விஷ்ணு விஷால் – அதுவும் இவ்ளோ சீக்கிரமாவா ?

- Advertisement -

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த செந்தில் பின்னர் தீவிர அரசியலிலும் ஈடுபட்டார். தேர்தல் சமயங்களில் நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்து வந்த இவர் சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியான பா ஜ கவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

 செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது செந்தில் மகன் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடைய மூத்த மகன் மணிகண்ட பிரபு ஒரு பல் மருத்துவர். இவர் தனது அப்பா, செந்தில் பெயரில் சாலிகிராமத்தில் தான் மருத்துவமனையை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement